Friday, July 29, 2011

சிங்கள இனவெறி ஜே.வி.பி.யின் தமிழகக் கிளை தான் ம.க.இ.க.!

நீண்ட நாட்களாக இணையப் பக்கம் வருவதில்லை. அவ்வப்போது வந்தாலும், நேரத்தை வீணடிக்கும் விவாதங்களில் பங்கேற்கவும் மனமில்லை. இருந்தாலும்,  ம.க.இ.க.வின் வினவு இணையத்தில் வெளியான ஓர் கட்டுரை குறித்து எனது கருத்துகளை சொல்ல ஆசைப்படுகிறேன்.

 

"தமிழ்நாட்டில் இருக்க்க் கூடிய தமிழர்கள் ஒன்று சேரக் கூடாவே கூடாது. அது என்ன தமிழ் இன உணர்ச்சி, தமிழன், வெங்காயம்? எல்லாப் பயலும் சாதி சாதியா தான் கிடக்கணும்..." என நினைக்கும் பலரையும் இந்தக் கட்டுரை புல்லரிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. தமிழன்னா பெரிய இவனா? என்று முண்டா முறுக்கும் இந்தியத் தேசியவாதிகளுக்கும் இக்கட்டுரை மிகப்பிடித்திருக்கும்.

 

ம.க.இ.க.வை பொறுத்த வரை ஈழத்திற்காக அவர்கள் செய்வது தான் போராட்டம், மற்றவர்கள் எது செய்தாலும் அது 'பிழைப்புவாதம்' செய்பவர்கள் பிழைப்புவாதிகள். அவர்கள் சொல்வது தான் தீர்வு மற்றவர்கள் சொல்வதெல்லாம் 'ஏகாதிபத்திய சதி மற்றும் சூழ்ச்சிகள்'. ம.க.இ.க.வை கவனித்து வருபவர்களுக்கு இது  ஒன்றும் புதிதல்ல.

 

ம.க.இ.க. வின் மாற்று அரசியலை(?) கூர்ந்து நோக்குவதாக சொல்லும், சுகுதேவ்(Sukudev) என்பவர்,  "மணியரசன் செய்தது என்ன?" என்று கேட்டிருக்கிறார்.  வெறும் கூட்டங்களில் கலந்து கொண்டும் தான் அவர் பேசினாரா என்றும் இந்த நபர் கேட்டிருக்கிறார்.

 

ம.க.இ.க. கூறுவதைப் போல, நம்மள விட்டா வேற யாருமே போராடக் கூட தகுதி இல்ல என்று நினைக்கும் அளவிக்கு மணியரசனின் த.தே.பொ.க. தன்னகங்காரமுடைய கட்சி அல்ல என்பதையும், ஈழத்திற்காக அவருடையை அமைப்பு நடத்திய போராட்டங்களைத் தெரிந்தவன் என்ற முறையிலும் சில விடயங்களை பகிர்கிறேன்.

 

ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசியதற்காகத் தான் இயக்குநர் சீமான் முதலில் கைது செய்யப்பட்டார். அப்பொதுக் கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மற்றும் பெ.தி.க. தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரும் கைது செய்யபட்டு சிறைபட்டனர். இக்கைது நடவடிக்கையைத் தொடர்ந்து தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈழப்போருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாயின என்று கூட சொல்ல்லாம்.

 

அப்போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர், ஈரோட்டில், ஈழத்திற்கு எதிராக நஞ்சு க்க்கிய இந்து நாளிதழ்களை எரித்த்து, தஞ்சையில் ஈழப்போரை கொச்சைப்படுத்திய செயலலிதா கொடும்பாவியை எரித்தது என பல்வேறு போராட்டங்களை தனித்தே நடத்தி வந்திருந்த நிலையில், ஈழப்போர் உக்கிரமடைந்த போதும் ம.க.இ.க.வினரைப் போல 'நாங்கள மட்டும் தான் போராளிகள்' என்று அகங்காரம் கொண்டு அலையவில்லை.

 

அப்போது, ஈழவிடுதலைக்கு ஆதரவாகவும், இந்திய அரசே போரை நடத்துகின்றது என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்த கொளத்தூர் மணியின் பெ.தி.க., தியாகுவின் த.தே.வி.இ. உள்ளிட்ட அமைப்புகளை இணைத்து தமிழர் ஒருங்கிணைப்பு என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திட தோழர் மணியரசனின் முயற்சி மிக முக்கிய காரணம்.

 

இக்கூட்டமைப்பு போரை நடத்துவது இந்திய அரசு தான் என்று அம்பலப்படுத்தும் விதமாக இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. தஞ்சையில் இந்திய விமானப்படைத் தளம் முற்றுகையிடப்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட பல நூறு தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போராட்டம் குறித்து தஞ்சையில் உள்ள ம.க.இ.க. நிர்வாக காளிமுத்துவிடம் கேட்டுப் பாருங்கள்.

 

அதனை விட முக்கியமான போராட்டம், இந்திய இலங்கை அரசுகளின் கொடிகளை எரித்தது. த.தே..பொ.க. மற்றும் த.தே.வி.இ. தோழர்கள் இப்போராட்டதில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 

த.தே.பொ.க. மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள், இலக்கிய மன்றங்கள், மாணவர், வழக்கறிஞர் அமைப்புகள் என பலவும் ஈழப்போரை எதிர்த்த பல அமைப்புகளை, போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். ம.க.இ.க.வின் ரசிகர் சுகுதேவைப் போல, ம.க.இ.க. தலைமையில் நடந்தால் தான் அது போராட்டம் என்று அகங்காரத்துடன் நினைக்கும் பலர் இன்றும் ம.க.இ.க.வில் உள்ளனர். ஏனெனில், தன்னுடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு, போராடும் அமைப்புகளையும், நபர்களையும் ம.க.இ.க.வின் அதன் தலைமையும் எப்போதும் அங்கீகரிப்பதில்லை. அதற்கு ஓர் உதாரணம் தான் சுகுதேவ் போன்றவர்கள்.

 
அதிக எண்ணிக்கையில் தமிழர்களுடைய தாயகமான தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் புகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ம.க.இ.க.விற்கு கவலை கிடையாது. ஏனெனில், தமிழ்நாடு என்ற தாயகம் இருப்பதால் தானே இவர்கள் தமிழ்நாடு தமிழன் என்றெல்லாம் பேசுகிறார்கள், ஆடுகிறார்கள் என்று சொல்லும் இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் மேட்டுக்குடிக் குரலின் மற்றொரு குரலாகத் தான் ம.க.இ.க. ஒலிப்பதை காண முடிகின்றது. 
 
ஈழத்தமிழர்களின் தாயகப்பகுதிகளாக வடக்குப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிங்கள அரசு குடியமர்த்துவதை கண்டிப்பதாக சொல்லிக் கொள்ளும் ம.க.இ.க., சிங்கள இனவெறி அரசைப் போலவே இந்திய ஆளும் வர்க்கமும் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் குடிபெயர்வதை ஊக்குவிப்பதை கண்டிக்காது. ஏனென்றால் ம.க.இ.க. இந்திய அரசின் உளவுப்படை "புரட்சியாளர்கள்".
 

உண்மையில், சிங்கள இனவெறிக் கட்சியான ஜே.வி.பி.யின் தமிழக்க் கிளை தான் ம.க.இ.க. கும்பல் என்ற பெயரில் இயங்குகிறது என்று நான் அடித்துக் கூறுவேன். இரண்டுக் கட்சிகளுக்கும் ஒரே அஜன்டா தான்.  இருவருக்கும் தமிழன் என்று சொன்னால் பிடிக்காது. பிரபாகரன் என்றால் பிடிக்காது. தனிஈழம் என்றால் பிடிக்காது. இருவருக்குமே மாவேவும், லெனினும் தான் வழிகாட்டிகள்.!