Thursday, October 15, 2009

பாசிசத்தை நோக்கிப் பயணமெடுப்பது ம.க.இ.க.வே

இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகளாகவும், இந்தியத் தேசியத்தின் ஊதுகுழலாகவும் வலம் வருகின்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த ”சர்வதேசியவாதிகள்”, ”தமிழ்த்தேசியம்” மீதான அவதூறுகளை அவ்வப்போது வாந்தி எடுத்து வருகின்றனர். ம.க.இ.க. போன்ற போலித்தனமான, ”முற்போக்கு” வேடமிட்ட ஆளும் வர்க்கக் கைக்கூலிக் கும்பல்களின் இவ்வாறான கூற்றுகள், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உரிமைக் குரல்களை மேலும் ஒடுக்குவதாய் தான் இருக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை.

ஒரு தேசிய இனம், இன ஒடுக்குமுறையின் கீழ் இருக்கும் பொழுது, இரண்டு தீர்வுகளை நாம் முன்வைத்துச் செயல்படலாம். முதலில், ஒடுக்கப்படுகின்ற தேசிய இனம், தம்மை ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் துணையுடன், அத்தேசிய அரசைக் கைப்பற்றி, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட ஓரு புதிய தேசிய அரசை படைக்கலாம். இரண்டாவதாக, ஒடுக்கப்படுகி்ன்ற தேசிய இனம், ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் தேசிய அரசின் கீழ் வாழ விரும்பாத பட்சத்தில், ஒடுக்கப்படும் தேசிய இனம் தமக்கான சுயநிர்ணய உரிமையை முன்னிறுத்தி, தமக்கான புதிய, தனித்த தேசத்தை, தனித் தேசிய அரசை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, ஒடுக்கும் தேசிய இனத்தின் அரசின் கீழிருந்து விடுதலை பெறலாம்.

ஈழத்தில், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரல்களை அங்கீகரித்துச் செயல்படக்கூடிய, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய சிங்களப் பாட்டாளி வர்க்க சக்திகள் வலுவாகவும், வீரியமானதாகவம் இல்லை. சிங்கள ஆளும் வர்க்கத்தின் இன ஒடுக்குமுறையின் மூர்க்கத்தனங்கள், இதுவரை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வந்திருந்தனவே ஒழிய என்றுமே குறைந்ததில்லை. ஆதலால் தான் ஈழத்தமிழர்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றிட ”தமிழீழம்” என்ற தனியரசைப் படைப்பது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தான் குறுந்தேசியவாதம் என்று விமர்சிக்கிறது, ஆளும் வர்க்கத்தின் ஒட்டுக் குழுவான ம.க.இ.க.

ஆரிய பார்ப்பனிய இந்தியாவால், தமிழ்நாடு ஒடுக்கப்படுகின்றது. நேரடியான ஆயுதந்தாங்கிய முறையில் அல்லாமல், தமிழ்நாட்டின் மீதும் பிற தேசிய இனங்களின் மீதும் இந்தியத் தேசிய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை இந்தியாவில் நிலவுகின்றது. இவ்வாறான, இன ஒடுக்குமுறை தம்மீது ஏவப்படுகின்றது என்ற விழிப்புணர்வு பெறாத நிலையிலேயே பெரும்பாலான தேசிய இனங்கள் இந்தியாவில் ஒடுக்குமுறையை அனுபவிக்கின்றன.

காசுமீர், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளின் இவ்வொடுக்குமுறைக்கு எதிரான நேரடி ஆயுதந்தாங்கியப் போராட்டம் நடைபெறுவதால், இந்தியத் தேசிய அரசு அதனை ஆயுதந்தாங்கி ஒடுக்கி வருகின்றது. தமிழ்நாட்டில், இந்தியத் தேசிய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற தமிழ்த் தேசிய அமைப்புகளால் இந்தியத் தேசியத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது. எனவே, தமிழ்த் தேசிய சக்திகளை, தமிழ்த் தேசிய அரசியலை, ஆரிய இனவெறி நாடான இந்தியா ”பிரிவினைவாதம்” என்றும், ”பிராந்தியவாதம்” என்றும் இழிவுபடுத்துகின்றது. ”தமிழ்த் தீவிரவாதம்” என்று மக்களுக்கு அச்சமூட்டுகின்றது. இந்தியத் தேசியத்தைத் திரைக் கிழிப்பது ”நாங்க தானுங்கோ” என்று வாய்ச்சவடால் அடிக்கும், ஆளும் வர்க்கத்தின் துணைப் படையான ம.கஇ.க., இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் குரல்களை மார்க்சிய சொல்லாடல்களைக் கொண்டு வாந்தி எடுக்கின்றது.

தமிழ்த் தேசியத்தை, ”பிரிவினைவாதம்” என்கிறது இந்தியத் தேசியம். ”குறுந்தேசியவாதம்” என்கிறது ம.க.இ.க. ”பிராந்தியவாதம்” என்கிறது இந்தியத் தேசியம். ”குறுந்தேசியஇனவெறி” என்கிறது ம.கஇ.க. பார்ப்பன ”இந்து” பத்திரிக்கை, ஈழத்தமிழர்கள் மீதான போரை நிறுத்து என்று தமிழகத்தில் போராடிய அமைப்புகளை, ”தமிழ் இனவெறி அமைப்புகள்” என்று மாலினி பார்த்தசாரதி என்ற பார்பன இனவெறியரைக் கொண்டு எழுதியக் கட்டுரையில் வர்ணித்தது. தமிழ் இனத்தின் உரிமையை பேசும் இதே அமைப்புகளை ”இனவாத அமைப்புகள்” என்று “இந்து“வின் குரலிலேயே எழுதியவை தான் ம.க.இ.க.வின் புதிய ஜனநாயக, கலாச்சாரப் பத்திரிக்கைகள். என்ன ஒரு ஒற்றுமை!

நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோரது பேச்சை எடுத்துக் காட்டி, தமிழ்த் தேசியத்தை பாசிசமாக சித்தரித்திருக்க முயன்றிருக்கிறது, ம.க.இ.க.வின் சர்வதேசியவாதிகள் இணையதளம்.

மராட்டிய இன உணர்வைக் கையிலெடுத்த ராஜ்தாக்கரே போன்ற பிற்போக்கு பார்ப்பன பாசிச சக்திகளின் செயல்பாடுகளை வைத்துக் கொண்டு இன உணர்வைக் கையிலெடுப்பவர்கள் எல்லோருமே பாசிஸ்டுகள் தான் என்றும் நிறுவ முயல்கிறது ம.க.இ.க. பாசிஸ்ட் கும்பல். அவ்வாறெனில், இன்றைக்கு கம்யுனிசத்தின் பெயரால் சீனாவும், கியுபாவும் இன்னபிற ”கம்யுனிச” நாடுகளும் செயல்படுவதை வைத்து, கம்யுனிஸ்டுகள் அனைவருமே தேசிய இன விடுதலையை “பயங்கரவாதம்“ என்று இழிவுபடுத்தும் பிற்போக்குவாதிகள் தான் என்றால் ம.க.இ.க.வினர் ஏற்றுக் கொள்வார்களா? கம்யுனிசத்தின் பெயரால் ஆட்சி நடக்கும் சீனாவில், அந்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்படும் சனநாயக விரோத அடக்குமுறைகளை ”கம்யுனிசம்” மக்கள் மீது தொடுக்கும் அடக்குமுறை என்றால் ம.க.இ.க. ஏற்றுக் கொள்ளுமா?

ம.க.இ.க. போன்ற முற்போக்கு வேடமிட்ட, ”இந்திய” வெறி பாசிஸ்டுகள் வேண்டுமானால் இவற்றை கூட அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்வர். ஆனால், மார்க்சியத்தை வழிகாட்டும் நெறியாக ஏற்றுக் கொண்ட உண்மையான தமிழ்த் தேசியர்கள் இவ்வாறான திரிபுவாதங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு இனத்தின் தாயகத்தை பறித்திடும் நோக்கோடு, அத்தாயகத்தில் வேற்று இனத்தவர்களை குடியமர்த்திடும் ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை எதிர்த்துப் போராடுவது தான் அவ்வினத்தின் தற்காப்பாக இருக்க முடியும். இதைத் தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும், நாம் தமிழர் இயக்கத்தினரும் கூறுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தியத் தேசிய வெறியுட்டலால் தமிழ்நாட்டில் அளவுக்கு மீறிய அளவில் குடியமர்ந்து, ஆதிக்கம் செலுத்துகின்ற அளவிற்கு உயர்ந்தும் நிற்கின்ற அயல் தேசிய இனத்தார்களை வெளியேற்ற வேண்டும் என்ற் நியாயம் இந்தியத் தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல, முற்போக்கு வேடமிடுகின்ற ம.க.இ.க.வின் பார்ப்பனக் கண்களுக்கும் கூட பாசிசமாகத் தான் தெரிகின்றது. ஒரு இனத்தின் தாயகத்தை பறித்திடும் நோக்கில் ஆளும் வர்க்கம் செயல்படுத்தும் வேலைத்திட்டங்களை எதிர்க்கவேக் கூடாது என்கிறதா ம.க.இ.க.?

”ஆம். எதிர்க்கக்கூடாது தான். தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் வரட்டும். இங்கு வந்து தமிழர்களின் வேலைகளை பறிக்கட்டும். இவ்வாறான தொடர் வேலைப் பறிப்புகள் மூலம் தான் தமிழ்நாட்டைத் தமிழர்களின் தாயகம் என்ற நிலையிலிருந்து மாற்றி, தமிழ்நாட்டில் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்ற நிலையைக் கொண்டு வர முடியும். இவற்றால், தமிழ்நாட்டுத் தமிழன் வேலையிழப்பதைப் பற்றி யெல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், எங்கிருந்தோ வருகின்ற அயல் இனத்தாரின் நலன் மட்டும் தான் எங்களுக்கு முக்கியம். இங்கு தமிழன் இருந்தால் என்ன வேலையிழந்து செத்தால் என்ன?” என்கிறது, இந்திய ஆளும் வர்க்கம். இதனையே வழிமொழிகிறது ம.க.இ.க. இப்படிப்பட்ட ம.க.இ.க. தான் தமிழ்த் தேசியத்தை பாசிசம் என்று உளறித் தள்ளி நடுங்குகின்றது.

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்தை எதிர்க்கக் கூடாது என்று இப்பொழுது கூக்குரலிடுகின்ற ம.க.இ.க. எப்பொழுதும் போல் இதிலும் இரட்டை வேடதாரிகளாகவே இருக்கின்றனர் என்பதே உண்மை.

அண்மையில் ம.க.இ.க.வின் புதிய ஜனநாயகத்தால் ”ஈழம் : ஒரு நேர்மையான மீளாய்வு” என்ற புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது. அப்புத்தகத்தில், ”ஒரு தேசிய இனத்தின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, அல்லது ஆக்கிரமிப்பது என்பது அதை அழியச் செய்வதில் முடியும் என்பது மிகவும் முக்கியமான விசயம். காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேசும் மற்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் குடியமர்ந்து, அங்கே கணிசமான அளவு பொருளாதாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பதை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தி வந்தது. ஆனால், காசுமீர் மக்களின் போராட்டத்தை ஒட்டி அந்த முயற்சி தடுக்கப்பட்டது. அங்கு அன்னியர்கள் யாரும் சொத்து வாங்குவதைத் தடை செய்யும் 370-வது சட்டப்பிரிவு இன்னமும் உள்ளது” (பத்தி 1 முடிவில், பக்கம் 20, மேற்கண்ட நூல்) என்று எழுதியிருந்தது பு.ஜ.

அதாவது, ”ஒரு தேசிய இனத்தின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, அல்லது ஆக்கிரமிப்பது என்பது அதை அழியச் செய்வதில் முடியும்” என்று பு.ஜ.வும் ம.க.இ.க.வும் நன்கு உணர்ந்திருப்பதாகவும் சொல்கின்றது. மேலும் இந்திய ஆளும் வர்க்கம தான், இந்தி பேசும் மக்களை காசுமீர், வடகிழக்கு மாநிலங்களில் குடியமர்த்துவதாகவும் பு.ஜ. கூறுகின்றது. இவற்றிலிருந்து, காசுமீர், வடகிழக்குப் பகுதிகளில் எழுகின்ற தேசிய இன சுயநிர்ணய உரிமைக் குரல்களை முடக்க, அத்தேசிய இனங்களின் தாயகங்களைப் பறித்தெடுக்கும் வேலைத்திட்டத்தை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தி வருவதை ம.க.இ.க. நன்கு அறிந்தும் வைத்திருக்கிறது.

தற்பொழுது தமிழ்நாட்டில், இந்தி பேசுபவர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் அதிகமாக பணிக்கு அமர்த்தப்படுதல், கட்டுமானப் பணிகளில் அயல் தேசிய இனத்தவர்கள் அதிகமாக ஈடுபடுத்தப்படுதல், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் நிலங்கள் வாங்குவதிலும், விற்பதிலும், குடியேறுவதிலும் அயல் மாநிலத்தவர்கள் ஆதிக்கம், வட்டித் தொழில், ஆன்லைன் வணிகம், மஞ்சள் வணிகம், துணி விற்பனை, திரைத் தறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அயல் தேசிய இனத்தவர்கள் ஆதிக்கம் என தமிழ்நாடு வேகமாக தம் தனித்தன்மையை இழந்து, தமிழ்நாட்டு நகரங்கள் தமிழர்களுக்கே அந்நியமயமாகி வருகின்ற சூழலைக் காண்கிறோம். சென்னையில் பல அப்பார்ட்மண்ட்களில் தமிழர்கள் உள்ளே சென்று வரக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு, தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்ற நிலையிலிருந்து மெல்ல அயல் தேசிய இனத்தவர்களின் ஆதிக்கக் கோட்டையாக மாறி வருகின்றது.

மேலும், ஈழத்தில் அண்மையில் நடைபெற்ற போர் தமிழ்நாட்டில் தமிழர்களிடம் தமிழ்த் தேசிய உணர்வையும், தாம் வாழும் இந்நாடு நம்முடையது தானா என்ற கேள்வியையும் பலமாக எழுப்பியுள்ளது. இவ்வுணர்வலைகளை முனை மழுங்கச் செய்ய வேண்டுமென இந்திய ஆளும் வர்க்கம் விரும்புவதாலேயே இந்திய அரசு இவ்வாறான அயல் தேசிய இனத்தவர் ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறது. இதனைக் கண்டித்து தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், நாம் தமிழர் இயக்கமும் குரல் கொடுக்கின்றன. குற்றம் சாட்டுகின்றன. இதிலென்ன தவறு கண்டது ம.கஇ.க.?

காசுமீர் மக்களின் போராட்டத்தை ஒட்டி அங்கு வெளி மாநிலத்தவர் நிலம் வாங்குவது தடை விதிக்கப்பட்டது என்று கூறுகின்ற ம.க.இ.க., காசுமீர் மக்களின் போராட்டம் போல தமிழ்நாட்டில் மக்கள் போராடக் கூடாது என்று தான் விரும்புகிறது. அதனால் தான் அயல் தேசிய இனத்தாரரின் ஆக்கிரமிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் மாற்றி மாற்றிக் குரல் கொடுத்து முழுவதுமாக அம்பலப்பட்டு நிற்கிறது ம.க.இ.க.

காசுமீரைப் போல தமிழ்நாட்டில் குரல்கள் எழந்தால் அதனை மட்டும் ”பாசிசம்” என்று புளுகி ம.க.இ.க. வரிந்து கட்டிக் கொண்டு எழுதுவது ஏன்? இந்திய ஆளும் வர்க்கத்தின் தமிழ்த் தேசியத் தாயகப் பறிப்புத் திட்டத்திற்கு துணைபோவது ஏன்? தமிழ்நாட்டை ஆக்கிரமித்து இங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் மார்வாடி குசராத்தி சேட்டுகள் குறித்து நீங்கள் என்றாவது வாய்த் திறந்திருக்கிறீரா? இது குறித்து ம.க.இ.க. வின் விமர்சனம் என்ன? காசுமீருக்கும் வடகிழக்கு தேசிய இனங்களுக்கும் ஒரு நீதி, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய இனத்திற்கு ஒரு நீதியா? இது தானே ம.க.இ.க.வின் ”மனுநீதி”. இதனால் தானே நாங்கள் ம.க.இ.க.வை பச்சைப் பார்ப்பனியக் கட்சி என்கிறோம்.

சிங்கள இனவெறி அரசு தமிழ் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்தி பேசும் மக்கள் குடியமர்த்தப்படுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். காசுமீரில் இந்தி பேசுபவர்கள் குடியேற்றப்படுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். ஆனால், தாம் ஊன்றி நிற்கும் தமிழ்த் தேசத்தில் மார்வாடி, வந்தால் என்ன குசராத்தி வந்தால் என்ன, அவர்களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள் தானே என்று பேசுமாம். ம.க.இ.க.வின் ”மனுநீதி”ப் பார்வை அப்பட்டமாக சந்தி சிரிக்கிறது. தமிழ்நாட்டில் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட வந்தேறிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக இதுவரை ம.க.இ.க. என்னென்னப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது? ம.க.இ.க.வில் உள்ள தமிழர்கள் இக்கேள்வியை ஏன் அதன் தலைமைக்கு எழுப்பவில்லை?

உலகிலேயே பெரிய சனநாயகவாதி போலும், முற்போக்குவாதி போலவும் வேடமிடுகின்ற ம.க.இ.க. தமிழ்நாட்டில் வெளியார் ஆதிக்கம் இருப்பதை ஏற்றுக் கொண்ட அமைப்பு தான் என்பது பலருக்குத் தெரியாது. இதோ அது குறித்த தகவல்....

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ”வெளியாரை வெளியேற்றுவோம்!” என்ற மாநாடு 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரோட்டில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டில், தமிழ்நாட்டின் தொழில் வணிகங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட அயல் தேசிய இனத்தாரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அம்மாநாடு நடக்கக் கூடாதென முட்டி மோதிக் கொண்டு காவல்துறையிடம் புகார் அளித்தனர் பார்ப்பன பாசிஸ்டுகளாக பா.ச.க.வினர்.

ஏனெனில், இம்மாநாட்டின் நோக்கமே, அவர்கள் கட்டி அழுது கொண்டிருக்கிற பார்ப்பன பனியாக்களின் பாசிச இந்தியாவிற்கு வெடி வைப்பதாக இருந்தது. பார்ப்பனர்களின் மலக்கழிவான தினமல(ம்)ர் நாளேடு அலறித் துடித்தது. மாநாட்டை இழிவு படுத்தி செய்தி வெளியிட்டுத் தன் வெறியைத் தீர்த்துக் கொண்டது. இந்து - இந்தி - இந்தியத் தேசியத்திற்கு உலை வைக்கும் இம்மாநாட்டிற்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டுகளான தினமல(ம்)ரும் பா.ச.க.வும் எப்படி துடித்தனவோ, அதே அளவில் துடித்தவர்கள் தான் ம.க.இ.க.வினர். ம.க.இ.க.வினரால் ”ஓடுகாலிகள்” என்று விமர்சிக்கப்படும், தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியினரும், இச்சமயத்தில் ம.க.இ.க.வினருடன் இணைந்து கொண்டு வேலை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இம்மாநாட்டிற்கு எதிராக செய்த பெரும் ”புரட்சிகர” நடவடிக்கை என்ன தெரியுமா?

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குழுமியிருந்த தோழர்களிடம் போய் ”தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒரு இனவெறிக் கட்சி. வர்க்க ஒற்றுமைக்கு எதிரான கட்சி. எனவே அதிலிருந்து வெளியேறுங்கள்” என்ற பாணியில் ஒரு துண்டறிக்கை கொடுத்தனர், இந்தப் ”புரட்சி”யாளர்கள்.

அத்துண்டறிக்கையில் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா? அயல் தேசிய இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களும், தமிழ்த் தேசிய இன உழைக்கும் மக்களும் இணைந்து சர்வதேசியப் புரட்சி பற்றி தான் பேச வேண்டுமாம். ஒரு தேசிய இனம், மற்றொரு தேசிய இனத்தின் உரிமைகளை அபகரிப்பதைப் பற்றிப் பேசினால் அது வர்க்க ஒற்றுமைக்கு பின்னடைவை ஏற்படுத்துமாம். அடேங்கப்பா..! இவர்களின் ”சர்வதேசிய”க் கண்ணோட்டத்தை பார்த்து நமக்கு சிரிப்புத் தான் வருகின்றது.

”மார்வாடியும் குசராத்தியும் இந்தியர்கள் தானே” என்று பார்ப்பன பனியாக்கள் எழுப்பும் குரலுக்கு, மார்க்சிய சாயமடித்து, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை கொண்டு அதற்கு மேக் அப் போட்டு வந்து நிறுத்தியது, ம.க.இ.க.வும் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியும். மார்க்சியத்தை வெறும் வறட்டுவாத சூத்தரமாக கருதுகின்ற மனோபாவமும், தான் சார்ந்து நிற்கின்ற இந்தியத் தேசியக் கருத்தியலும் தான் ம.கஇ.க. போன்ற மார்க்சிய லெனினியக் குழுக்களை வழிநடத்துகின்றது. இதனால் தான், இக்குழுக்கள் மார்கசியம் வலியுறுத்துகின்ற உண்மையான சர்வதேசியத்தை மூடி மறைத்துக் கொண்டு, புதியதொரு கற்பனாவாத சர்வதேசியக் கண்ணோட்டத்தை வலியுறுத்துகின்றனர். பார்ப்பன இந்தியத் தேசிய அரசால் ஒடுக்கப்படுகின்ற தமிழ்த் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களின் வேலைகளை பிடுங்கிக் கொள்ளும் பொருட்டு செயல்படுகின்ற அயல் தேசிய இனங்களுக்கு முதலில் இவர்கள் சர்வதேசியத்தைப் பற்றி பாடமெடுக்கட்டும்.

ம.க.இ.க.வினர் ”மார்வாடிகள் தமிழகத்தில் தொழில்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதையோ அந்த ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்பதையோ நாங்கள் மறுக்கவில்லை” என்றும் தாம் வெளியிட்ட அத்துண்டறிக்கையில் எழுதியிருந்தனர். அதாவது அயல் தேசிய இனத்தவர்களின் ஆதிக்கத்தை இவர்கள் மறுக்கவில்லை என்பார்களாம். அதே ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினால் அதை பாசிசம் என்பார்களாம். என்ன ஒரு நியாயம்...! ”மனுநீதி” நியாயம்!

ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுகின்ற ஓட்டுப் பொறுக்கி சந்தர்ப்பவாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல ம.க.இ.க.வினர் என்பதனை இச்செய்திகள் அம்பலப்படுத்துகின்றன.

கலப்பு மணங்கள் சாதியை ஒழித்துக் கட்டுமாம். கலப்பு இனங்கள் இனத்தை ஒழித்துக் கட்டுமாம். சர்வதேசியவாதி எழுதித் தீர்த்திருக்கிறார். எப்பேர்பட்ட அறிவியல் ரீதியான ஆய்வு. ஒருவனுக்கு கீழ் இன்னொருவன் அடிமைப்பட்டே கிடக்க வேண்டும் என்ற ஒடுக்குமுறைக் கருத்தியலான சாதியும், தமக்கென தனித்த பண்பாடு, வரலாறு, மொழி கொண்ட ஓர் தேசிய இனமும் ஒன்றாம், ம.க.இ.க.வினர் பாடமெடுத்திருக்கின்றனர். அப்படியெனில், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம் என்று ம.க.இ.க.வினரின் அலறல்களைப் போல, சாதிய சுயநிர்ணய உரிமைகளையும் இவர்கள் அங்கீகரிப்பார்கள் போலும். சாதியைப் போலவே இனமும் ஓர் ஒடுக்குமுறைக் கருத்தியல் என்று மார்க்சிய வேடமிட்டுக் கொண்டு எழுதுகின்ற ம.க.இ.க. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகக் கூறுவதெல்லாம் வெறும் வாய்ச்சவடாலுக்குத் தானா? உங்களது அணித் தோழர்களை தேற்றி வைப்பவதற்காக மட்டும் தானா?

மார்க்சியத்தை முன்னிறுத்திக் கொண்டு, போலி வேடந்தரித்து நிற்கின்ற ம.க.இ.க. போன்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் துணை அமைப்புகளை, முற்போக்கு வேடமிட்ட ”இந்திய” வெறி பாசிஸ்டுகளை தமிழ்த் தேசியர்கள், உணர்வாளர்கள் புறந்தள்ள வேண்டும். ம.க.இ.க. போன்ற அமைப்புகளில் உள்ளவர்கள் இனிமேலாவது சிந்திக்க வேண்டும். பாசிசத்தை நோக்கி பயணமெடுப்பது தமிழ்த் தேசியமல்ல, ம.க.இ.க. போன்ற ஆரிய ”இந்திய” வெறி அமைப்புகளே என்று உணர வேண்டும்.

Labels:

Tuesday, October 13, 2009

விவாதம் வேண்டாமாம்: ஓடுகிறது ம.க.இ.க.

விவாதம் வேண்டாமாம்: ஓடுகிறது ம.க.இ.க.


தமிழ் இனத்திற்கான உரிமையை வலியுறுத்திப் பேசும் அனைவரையும் ”இனவாதிகள்” என்று கொச்சைப் படுத்தும் கோயபல்சுகளின் கும்பலான ம.க.இ.க.வினர் தற்பொழுது மீண்டும் ஒருமுறை அம்பலப்பட்டுள்ளனர்.

ம.கஇ.க.வின் அரசியலைக் கேள்விக்குட்படுத்தி நாம் தொடர்ந்து எழுதி வருகின்ற விமர்சனங்களை, தர்க்க ரீதியாக எதிர்கொள்ள துப்பில்லாத இவர்கள், ”விவாதத்திற்கு தயாரா?” என்று வாய்ச்சவடால் விடுத்தனர். சரி, விவாதிப்போம் என்றேன் நான்.

தொடக்கத்திலேயே இவர்கள் ஓடிவிடுவர் எனவே விவாதிப்பது வீண் என்றும், இவர்கள் நேரத்தை தான் விரயம் செய்வார்கள் என்றும் என்னை பல தோழர்கள் எச்சரித்தனர். நான் அவர்களது கூற்றுகளை பொருட்படுத்தாமல் எனது நேரத்தையும் ஒதுக்கி அவ்வப்போது அவர்களே எமக்களித்திருந்த பக்கத்தில், எனது கருத்துகளை பதிந்து வந்தேன். அவர்கள் மறுத்து எழுதினர். நானும் எதிர் கருத்துகளை முன் வைத்துக் கொண்டு தான் இருந்தேன். நேரமின்மையால் பாரிய நேர இடைவெளிகளில் பதில் அளித்தும் வந்திருந்தேன். பாதுகாப்புக் கருதி என்னுடைய பதில்களை எனது வலைப்பதிவிலும் எழுதி வந்தேன். இது அனைவருக்கும் தெரிந்தே வெளிப்படையாக நடந்தது.

கடைசியாக நான் பதிவிட்டது இதைத் தான்,

அதாவது இந்திய ஆளும் வர்க்கங்கள் கூறுவது போல, ”தமிழ்நாட்டில் மக்களெல்லாம் நன்னாத்தான் இருக்கேளே… அவாளுக்கு ஏன் நாடு வேணும்… நமக்குக் கீழேயே கிடக்கட்டும்..” என்ற கருத்தை தான் மர்க்சிய சாயமடித்து நீங்கள் சொல்ல வருகின்றீர் என்பதும் புரிகின்றது…..


இந்த கருத்துகளால் இந்திய ஆளும் வர்க்கமும், அதன் உளவுத்துறையும் வேண்டுமானால் கலங்கியிருக்கலாம். ஆனால், கலங்கியது இவர்களது ”தோழமை” அமைப்பான ம.க.இ.க. தான். அதனால் தான் இவ்விவாதங்கள் மூலம் மேலும் பல எதிர்க் கருத்துகள் வெளியாகும் என புறக்கணித்திருப்பார்களோ என்று எண்ண தோன்றுகிறது.

விவாதம் செய்யவதற்கு முன்பிருந்தே இவர்களது நோக்கம் என்னவாக இருந்ததென்றால், நான் கூறும் கருத்துகளை விமர்சிக்கவோ, தர்க்க ரீதியாக எதிர்த்து வாதிடவோ இவர்களுக்கு அக்கறையில்லை. நேர்மையில்லை. மாறாக, நான் எந்த அமைப்பைச் சார்ந்தவன் என்பதை நோண்டுவதிலேயே இவர்களது அக்கறை வெளிப்பட்டது. இவர்களிடம் நான் சார்ந்திருக்கும் அமைப்பின் பெயரைக் கூறினால், உடனே அந்த அமைப்பைப் பற்றி அவர்கள் தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்ட வசைகளை பொழிந்து விட்டு, ”உங்களுடன் விவாதிக்க விருப்பமில்லை” என்று ”மீசையில் மண் ஒட்டாமல்” ஓடிவிடுவது தான் இவர்களது திட்டமாக இருந்தது. இச்சூழ்ச்சியை எண்ணியே, இவர்களிடம் நான் சார்ந்திருக்கும் அமைப்பின் பெயரைக் கூறவில்லை.

இப்பொழுது, விவாதிக்க வெறுத்துப் போய் நான் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி (த.நா.ம.லெ.க.) அமைப்பைச சேர்ந்தவன் என்று இவர்களாகவே கற்பிதம் செய்து கொண்டு, ”என்னை புறக்கணிக்கிறோம்” என்ற அறிவிப்பின் பெயரில் மீண்டும் ஒருமுறை தானாகவே விவாதத்திற்கு பயந்து ஓடுகின்றனர்.

”கீற்று” இணையதளத்தின் விவாதத்தின் போது, இது போல இவர்கள் ஓடினர். அப்பொழுது நான் ”இவர்கள் ஓடியது ஏன்?” என்று கேட்டவுடன் ரோசம் பொத்துக் கொண்டு வந்து, ”விவாதத்திற்கு வா!” என்று அறைகூவினர். இப்பொழுது, விவாதத்திற்கு நான் வந்தும் கூட, ”புறக்கணிக்கிறோம்” என்ற பெயரில் விவாதத்திற்கு பயந்து ஓடுகின்றனர்.

இனி இவர்களுடன் நான் விவாதிக்கப் போவதில்லை. இவர்கள் எப்படி அழைத்தாலும், இவர்களுடன் இனி விவாதிக்கத் தேவையுமில்லை என நினைக்கிறேன். ”தமிழ்த் தேசியம்” என்ற சித்தாந்தம் தர்க்க ரீதியில் தவறானது என்று விவாதிக்க இவர்களிடம் சரக்கில்லை. இதற்குக் காரணமாக, உண்மைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் இவர்களிடம் துளியளவும் இல்லாமையை சொல்லலாம். வறட்டுத்தனமே இவர்களை வழிநடத்துவதால் இவர்களிடம் நாம் விவாதிப்பதில் பயனுமில்லை என்று நினைக்கிறேன்.

இவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின், கருத்தியலைப் பின்பற்றி தேசிய இன விடுதலைப் புரட்சியை சீர்குலைக்க உருவாக்கப்பட்டுள்ள சீர்குலைவு அமைப்புகளே என நான் மீண்டும் பிரகடனப்படுத்துகிறேன்.. வங்கதேச விடுதலையின் போது இந்திய உளவுத்துறையினர் ”முக்தி வாஹினி” போன்ற போலி ”புரட்சிகர” அமைப்புகளை உருவாக்கியதைப் போல தமிழ்த் தேசிய இன விடுதலையை சீர்குலைக்க உருவாக்கப்பட்டுள்ள போலி புரட்சியாளர்களின் அமைப்பை மக்கள் கலை இலக்கியக் கழகம். அதனைப் பின்னின்று இயக்கி வருகின்ற ”இந்திய(?) கம்யுனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தமிழ் மாநில அமைப்புக் கமிட்டி CPI ML SOC”, இந்திய உளவுத்துறையினருடன் நேரடித் தொடர்பில் இருப்பினும், அது வியப்புக்குரியதில்லை...
நாம் தொடர்ந்து இவர்களை அம்பலப்படுத்தி எழுதுவோம்.
விட மாட்டோம்
என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தான் மக்கள் கலை இலக்கியக் கழகம்

Labels: , ,

Thursday, October 8, 2009

விவாதம்: ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களின் ஒருங்கிணைவிற்கு தடை யாரால்? - 5


சர்வதேசியவாதிகள் :
//////இந்திய கட்ட‌மைப்பு புரட்சிகரமானதா ! என்ன சொல்கிறீர்கள் ?//////

தற்பொழுது உள்ள இந்தியக் கட்டமைப்பு புரட்சிகரமானது என்று நாம் கூறவில்லை.

தற்பொழுது கட்டியெழுப்பப்பட்டுள்ள, இந்தி ஆதிக்க பார்ப்பன பனியாக்களின் கட்டமைப்பான இந்தியக் கட்டமைப்பு, தகர்க்கப்பட்டட பின்னர், ”புரட்சிகரமான” ஒரு ”இந்தியா”வை உருவாக்க விரும்பும் தங்களைப் போன்றவர்களின் கனவை தான் நாங்கள் சந்தேகிக்கிறோம்...அது முடியாதெனவும் சொல்கின்றோம். ஏனெனில், இப்படிப்பட்ட ”புரட்சிகர” இந்தியா என்ற பெயரில், தம் தேசிய இனத்தின் ஆதிக்கத்தை இழப்பதற்கு இந்திக்காரர்கள் விரும்பவே மாட்டார்கள் என்பது தான் உண்மை. ஒருவேளை இந்தித் தேசிய இனத்தின் “புரட்சிகர” பாட்டாளி வர்க்கத்தை ம.க.இ.க.வினர் தட்டி எழுப்பி, அப்படிப்பட்ட ”புரட்சிகர” இந்தியாவை படைப்போம்” என்று வாதிட்டாலும் அது நடைமுறைக்கு ஒவ்வொததாகவே காட்சியளிக்கிறது.

//////////////இந்திய தேசியத்தை நாம் முறியடிக்க வேண்டுமானால், நம்மைப் போல ஒடுக்குமுறைக்குள்ளாகும் அனைத்து தேசிய இனங்களுடனும் ஐக்கியப்படுவது ஒன்றே சாத்தியம். இதற்கு மாற்றான வழிமுறை இல்லை என்பதே எமது கருத்து.//////////////

புரட்சியாளர் லெனின் தலைமையில் ரசியப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் இயங்கியக் கொண்டிருந்த போது, ரசியப் புரட்சி நடந்தவுடன், பின்லாந்து பிரிந்து போக விரும்பியது ஏன்?

அப்பொழுது கூட, ”பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உடைகின்றது, ஏகாதிபத்தியம் உங்களை ஏப்பம் விட்டு விடும், அதனால் பிரிநது போகாதீர்!” என்று புரட்சியாளர் லெனின் அப்பொழுது ம.க.இ.க.வைப் போல வறட்டுவாதம் பேசவில்லை. மாறாக, ரசியப் பாட்டாளி வர்க்கத்தின் கீழ் இயங்க விரும்பாத அந்நாட்டை பிரிந்து செல்லுங்கள் என வழிவிட்டார். அப்பிரிவினையை ஆதரித்தார். இது தான் லெனின் வகுத்தளித்த பாட்டாளி வர்க்க சர்வதேசியம். ஒடுக்கப்படும் இனம் பிரிந்து போக முடிவெடுத்தால், அதனை ஒடுக்கும் இனத்திலுள்ள பாட்டாளி வர்க்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தன் நடைமுறையின் மூலம் வலுப்படுத்தினார் புரட்சியாளர் லெனின்.

ஆனால், தற்பொழுது ம.க.இ.க. போன்ற சக்திகள், ஏகாதிபத்தியத்தைக் காரணம் காட்டியும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு எதிரானது இது என்று சொல்லியும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தமக்கென்று ஒரு தேசம் அமைத்துக் கொள்ள உள்ள தேசிய இனங்களுக்குள்ள பிறப்புரிமையை தடுக்கின்றனர். அவதூறு செய்கின்றனர். ஒடுக்குகின்ற இனத்தைக் கூட இனங்காண மறுக்கின்றனர்.

இந்தித் தேசிய இனத்துடனும், மற்ற அயல் தேசிய இனங்களுடன் தமிழ்த் தேசிய இனம் ஐக்கியம் பேண வேண்டும் என்று விரும்பினால், தமிழ்நாட்டைப் போல ஓரளவாவது தேசிய இன உரிமைகளை பேசக்கூடிய புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளை மற்ற தேசிய இனங்களில், ம.க.இ.க. போன்ற ”அகில இந்தியப் புரட்சி” கனவு காணும் அமைப்புகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதனை யார் தடுத்தார்? ஏன் இதனை இவர்களால் செய்ய முடியவில்லை? உத்திரப்பிரதேசத்திலும், ஹரியானாவிலும் சென்று இந்தித் தேசிய இன மக்களிடம் பாட்டாளி வகுப்பு சர்வதேசியத்தைப் பற்றி பாடமெடுங்கள். யார் தடுத்தது?

கடந்த மாதம் கூட, தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பான ”தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க”த்தின் மாநாடு ஈரோட்டில் நடந்தது. அதில் கேரளாவிலிருந்து ”போராட்டம்”(ஸட்ரகல்) என்ற அமைப்பு, காநாடகவிலிருந்து ”கருநாடக ஜனபரவேதிகே”, மணிப்புரிலிருந்து ”மனாப் அதிகார் சுரக்ஷா ணமிதி”, நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர். கர்நாடக, கேரள அமைப்புகளுடன், அத்தேசிய இனத்தவருடனான நதிநீர் பங்கீட்டு சிக்கல்களில் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், கூட அவ்வமைப்புகளின் ”தேசிய இன முன்னுரிமை”, ”மனித உரிமை” போன்ற தளங்களில் ஒன்றுபட்டு உழைத்திட தமிழ்த் தேசிய அமைப்புகள் தயாராகவே இருக்கின்றன.

1990களில் தமிழ்நாட்டில் ”தன்னுரிமை” முழக்கங்கள் எழுந்த போதும் அதன் பின்னர் நடந்த பல கூட்டங்களிலும், இவ்வாறு அண்டைத் தேசிய இனத்திலுள்ள போராட்ட இயக்கங்களை தமிழ்த் தேசிய அமைப்புகள் அங்கீகரித்து, அவற்றை அரவணத்துக் கொண்டே வந்திருக்கின்றன.

”அனைத்திந்தியப் புரட்சி” பேசுகின்ற ம.க.இ.க. போன்ற சீர்குலைவு சக்திகள், இது போன்ற தேசிய இனங்களுடனான குறைந்த பட்ச ஒருங்கிணைப்பு, குறைந்த பட்ச பொது வேலைத் திட்டம் என்பதைக் கூட வைக்காமல், அவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு தம் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பியும், ”இனவாத” முத்திரை குத்தியும் தம் அணிகளை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்கின்றன.

/////////இந்த ஒடுக்குமுறைக்குள்ளியிலிருந்து தேசிய‌ இனங்கள் அனைத்தும் விடுதலை பெற‌‌ வேண்டுமானால் ஒடுக்குமுறையாளனான இருக்கும், அனைத்து மக்களுக்கும் பொது எதிரியாக இருக்கும் இந்திய தேதியத்துக்கு எதிராக தமக்குள் ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தனி ஒரு தேசிய இனம் மட்டும் இதை எதிர்த்து போராடி விடுதலை பெற முடியாது. இதற்கான உதாரணம் தான் காஷ்மீரும்,வடகிழக்கு மாநிலங்களும். //////////

தேசிய இனங்களிடையே பகைமையை உண்டாக்குவதும், வளர்த்து வருவதும் இந்திய அரசு தான் என்று யாருக்குத் தெரிந்திருக்கிறது? தமிழினம் போன்ற, அப்பகைமையால் பாதிப்புக்குள்ளாகும் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்குத்தான் தெரிந்திருக்கிறது.

ஆனால், இவற்றை உணராமல் இந்திய அரசின் இனவெறிக்கும், பிரித்தாளும் பகைமைக்கும் இரையாகி தம் தேசிய இன நலன்களைப் பேணுகின்ற அண்டைத் தேசிய இனங்களை நாம் கண்டிக்கவே கூடாது?

அப்படி கண்டித்தாலே அது ”இனவாதம்” என்றாகிவிடுமா? கன்னடர்களையும் மலையாளிகளையும் இந்திய அரசின் இனவெறிப் போக்கிற்கு பலியாகிவிடாதீர் என்று தானே கண்டிக்கிறோம். அதனை கூட கண்டித்தால் ”குறுந்தேசியஇனவெறி” என்று, இங்கிருந்து கொண்டு கூச்சலிடும் உங்களது வாதங்களை தான் நாம் சந்தேகிக்கிறோம். அது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சாதகமானது என்று கூறுகிறோம்.

கேரளாவிலும், ஆந்திரத்திலும் இந்திய அரசின் பகைமை உண்டாக்கும் சூழ்ச்சிக்கு எதிராக இதுவரை எந்த சிறு குரல்களும் எழவில்லை? ஏன்? இவ்வாறு குரல்கள் எழுவதை யார் தடுத்தார்? ம.கஇ.க.வினர் சென்று முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை ஏற்றுக் கொண்ட ”புரட்சிகர” கேரளப் பாட்டாளி வர்க்கத்தைத் தட்டி எழுப்பட்டுமே யார் தடுத்தது? இவற்றை செய்வதற்கான துணிவோ, முன்முயற்சியோ உங்களுக்கு இல்லை. மாறாக, தமிழ்த் தேசிய இன உரிமைக்குப் போராடுகின்ற அமைப்புகளை ”இனவாதிகள்” என்று அவதூறு செய்வதற்குத் தான் உங்களைப் போன்றோர்க்கு நேரமிருக்கிறது. அவ்வாறு கூறி, தம் சொந்த அணிகளை திருப்தி படுத்திக் கொண்டு சுயஇன்பம் காணவும் பிடித்திருக்கிறது.

அயல் தேசிய இனங்களில் ஏற்கெனவே உள்ள ”புரட்சிகர” அமைப்புகளையோ, கட்சிகளையோ, அரவணத்துக் கொள்வதற்கும், புதிய புரட்சிகர அமைப்புகளை உருவாக்குவதற்கும் உங்களுக்கு வக்கில்லை, நேரமில்லை, மாறாக தமிழினத்தின் உரிமை பறிபோகிறதே என்று குரல் கொடுக்கும் தேசிய இன அமைப்புகள் மீது ”இனவாத” முத்திரை குத்துவதோடு உங்களது ”புரட்சிகர” பணி சுருங்கி விடுகிறதே... இது ஏன்..? இதனை எப்பொழுது பரிசீலனை செய்வீர்கள்?

சத்தீஸ்கர், ஆந்திரம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மாவோயிஸ்டுகள், மக்கள் யுத்தக் குழுவினர் உள்ளிட்ட போராளி அமைப்புகளில் யாருடனாவது உங்களுக்கு தோழமை உண்டா? எல்லோரையும் சகட்டு மேனிக்கு ”விமர்சனம்” என்ற பெயரில் அவதூறு செய்து விட்டு இறுதியில் ”இந்தியப் புரட்சி” என்ற கனவுடன், தனிமைப்பட்டிருப்பது நீங்கள் தான். இது தான், நீங்களே சொல்லுகின்ற ”அனைத்திந்தியப் புரட்சி”யின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை போலும்.

தனித்து தேசிய இனங்கள் போராடி வெற்றி பெற முடியாது என்று சொல்லும் நீங்கள், முதலில் தமிழ்த் தேசிய இனத்துடன் போராட முன் வரும், புரட்சிகர அண்டைத் தேசிய இனப் பாட்டாளி வர்க்கங்களை அடையாளம் காட்டுங்கள். ”ஐக்கியத்தை” பற்றி சிறிதாவது சிந்திக்கலாம்.. அதை விட்டுவி்ட்டு, தமிழ்த் தேசிய அமைப்புகளை, ”குறுந்தேசியஇனவெறி”, ”இனவாதம்” என்றெல்லாம் கூறி இழிவுபடுத்தும், இந்திய ஆளும் வர்க்கத்தின் துணை அமைப்பு போல நின்று கூச்சலிடாதீர்கள்...

////////ஏகாதிபத்திய தலையீடு இல்லாமல் விடுதலை பெற்ற ஒரு நாடாவது இன்று உலகில் இருக்கிறதா ? இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.//////////

ஏகாதிபத்தியத் தலையீடு இல்லாத தேசிய இன விடுதலை கிடையாது என்று சொல்கின்ற நீங்கள், யார் சார்பாக இக்கருத்தை வைக்கிறீர்கள்? ஏகாதிபத்தியத்தை பணிய வைக்கின்ற, எதிர் கொள்கின்ற வலிமை மிக்கப் போராட்டங்களைக் கட்டமைத்து விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எமது நோக்கமே அன்றி, ”ஏகாதிபத்தியம் தலையீடு செய்யும்” என்று பயந்து கொண்டு, பம்மிக் கொண்டு, மார்க்சியத்தின் பெயரைச் சொல்லி தேசிய இன விடுதலைப் போரை பின்னுக்குத் தள்ளி விடுவது அல்ல.

சர்வதேசியவாதிகள்:

//////////////////இது முழு உண்மை அல்ல. அதே அளவிற்கு முழு பொய்யுமல்ல.///////////////

காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர் சிக்கல்களில் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகவும், பிற தேசிய இனங்களுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு செயல்பட்டு தமிழ்த் தேசிய இனத்தை இந்திய அரசு ஒடுக்குகிறது என்ற நாம் கூறினோம். அதற்கு பதிலாக நீங்கள் சொன்னது தான் மேற்கண்டது. ”இது முழு உண்மை அல்ல. அதே அளவிற்கு முழு பொய்யுமல்ல”....

”இது முழு உண்மை அல்ல” என்ற கூற்றின் மூலம், நதிநீர் சிக்கல்களில் தமிழ்த் தேசிய இனத்தை இந்திய அரசு ஒடுக்குகின்றது என்பதை நீங்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதே போல், பிற தேசிய இனத்திற்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளவில்லை என்பதையும் நீங்கள் ”உண்மையல்ல” என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

வாய்ப்பு வசதிக் கருதி, எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் ”இது பொய்யுமல்ல” என்றும் கூறி மழுப்பியிருக்கிறீர்கள்.

அதே போல, அதாவது மற்ற தேசிய இனங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளவில்லை. எனவே //////////////// இங்கு எந்த தேசிய இனமும் ஒடுக்கப்படாமல் இல்லை, அனைத்து இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றன.//////////////// என்றும் கூறியிருக்கின்றீர்....

அதாவது உங்களது கூற்றுகளின் சாரம் கீழ்க்கண்டது தான் என வரையறுக்கிறேன்.

”இந்திய அரசு வேறு தேசிய இனங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை. அனைத்து இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றன”

இவ்வாறெனில், இந்திய அரசு தொடர்ச்சியாக தமிழினத்தை ஒடுக்கி வருவதற்குக் காரணம் அதன் ஆரிய இனச் சார்பு தான் என்கிறோம். ”நீங்கள் அதெல்லாம் கிடையாது” பொருளாதாரம் தான் காரணம் என்று வாதிடுகிறீர்.

பொருளாதார நோக்கம் தான் காரணம் என்றால் இந்திய அரசு இவ்வாறு பகைமையை உண்டாக்கி, அதன் ஆளும் வர்க்கங்கள் தொழி்ல் நடத்துவதற்குத் தேவையான அமைதியான நிலைமையை கெடுத்துக் கொள்ளாது. இதனை ஏற்கிறீரா? இல்லையா?

”காசுமீர், மணிப்புர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் இந்தியப் பாசிச அரசு செலுத்துகின்ற ஆயுதந்தாங்கிய ஒடுக்குமுறைகளை விட, தமிழினம் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது” என்று நான் எங்காவது குறிப்பிட்டிருக்கிறேனா? எடுத்துக் காட்ட முடியுமா?

அங்கு நடைபெறுகின்ற தேசிய இனப் போராட்டங்களைப் போல தமிழ்நாட்டில் தேசிய இனப் போராட்டம் வீறு கொள்ள வேண்டும் என்று தான் நாம் சொல்கிறோமே தவிர, அங்கு நடைபெறுகின்ற ஒடுக்குமுறையைவிட தமிழ்நாடு அதிகமாக ஒடுக்கப்படுகின்றது என்பதனை நாம் எங்கேயும் சொன்னதில்லை. ஆனால், நீங்கள் இதனை திரித்து எழுத வேண்டியதன் நோக்கம் என்ன...?

முதலில்,

”அனைத்து தேசிய இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றது” என்று சொன்னீர்கள்,

”தமிழினத்திற்கு ஒடுக்குமுறையின் தன்மை அதிகம்” என்று சொன்னீர்கள்,

அதெல்லாம் கூறிய நீங்கள் இப்பொழுது என்னவென்றால், ”ஈழத்தமிழர்களைப் போல, காசுமீர், அசாம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதி தேசிய இனத்தவர்கள் போல தமிழர்கள் ஒடுக்கப்படவில்லை” என்கிறீர்கள்,

இவ்வாறு கூறுவதன் மூலம் இரண்டு விடயங்களை உங்களது எழுத்துகளிலிருந்து உணர முடிகின்றது.

ஒன்று, ”ஆயுதம் தாங்கி ஒடுக்கினால் மட்டும் தான் அது தேசிய இன ஒடுக்குமுறை, அங்கு மட்டும் தான் தேசிய இன விடுதலையை முன்னிறுத்தி போராட வேண்டும்....” என்று கூற முற்படுகிறீர்கள்..

இரண்டு, ”அவ்வாறு ஆயுதம் தாங்கிய ஒடுக்குமுறை தமிழகத்தில் இல்லாத காரணத்தினால், தமிழ்நாட்டில் தேசிய இன விடுதலைப் போராட்டம் தேவையற்றது, தமிழர்கள் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை தான் நடத்த வேண்டும்” என்கிறீர்கள்...

அதாவது இந்திய ஆளும் வர்க்கங்கள் கூறுவது போல, ”தமிழ்நாட்டில் மக்களெல்லாம் நன்னாத்தான் இருக்கேளே... அவாளுக்கு ஏன் நாடு வேணும்... நமக்குக் கீழேயே கிடக்கட்டும்..” என்ற கருத்தை தான் மர்க்சிய சாயமடித்து நீங்கள் சொல்ல வருகின்றீர் என்பதும் புரிகின்றது.....

Wednesday, October 7, 2009

விவாதம்: இந்திய நாட்டில் தேசிய இன ஒடுக்குமுறையின் வகை - பகுதி 4

சர்வதேசியவாதிகள்: ////////////இந்த நாட்டில்(இந்தியா) ஒடுக்கும் தேசிய இனம் என்கிற சிறப்புத்தன்மை இல்லை. இந்தி தேசிய இனமும் கூட ஒடுக்கப்படுகிற இனம் தான். மாறாக அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குவது இந்து தேசியமும், அதை கட்டியமைத்த பார்ப்பன பனியா கும்பல் தான். இந்தி தேசிய இனம் தான் ஒடுக்கும் இனம் எனில் அது எவ்வாறு என்று விளக்க முடியுமா?////////////


ஆரிய இந்திய அரசின் ஒடுக்குமுறை என்பது நேரடியான பெருந்தேசிய இன ஒடுக்குமுறை வகை சார்ந்த ஒடுக்குமுறை அல்ல. மாறாக, இது கட்டமைப்பு ஒடுக்குமுறை எனப்படுகின்ற Structural Opression என்ற வகையிலான ஒடுக்குமுறையாகும். இதற்கு பின்புலமாக இந்தித் தேசிய இனம் உள்ளது என்பதே எமது வரையறுப்பு. குற்றச்சாட்டு.


அதாவது, ஒர் இனத்திற்கு கூடுதல் நலன் பயக்கக்கூடிய ஓர் அரசியலமைப்பைக் கொண்டு அதன் கீழ் வாழும் பல்வேறு தேசிய இனங்களையும் அடிமைப்படுத்தி ஒடுக்குகின்ற அரசின் கட்டமைப்புகளை கொண்டு நடைபெறும் ஒடுக்குமுறை இது.


இந்தியத் தேசிய அரசால், இந்தித் தேசிய இனம் ஒடுக்கப்படுவதென்பது இன ஒடுக்குமுறையை மையமாகக் கொண்ட ஒடுக்குமுறை வடிவம் அல்ல.


சிங்கள இனவெறி அரசு எப்படி ஈழத்தமிழர்களை ஒடுக்கிறதோ அதைப் போல, இந்திய அரசு இந்தித் தேசிய இனத்தை ஒடுக்குவதில்லை.


மாறாக, இந்தித் தேசிய இனத்திற்கு இந்தியத் தேசிய அரசு ஏற்படுத்துகின்ற ஒடுக்குமுறை என்பது ஒரு தேசிய முதலாளிய அரசு, அதன் இறையாண்மையின் கீழ் வாழ்கின்ற தம் மக்களுக்கு எதிராக தொடுக்கும் ஒடுக்குமுறை வகையைச் சேர்ந்தது இது. இதனை தேசிய இன ஒடுக்குமுறை என்று கூறுவதே முட்டாள்தனம் ஆகும்.


இந்தித் தேசிய இனத்தின் மொழியான ”இந்தி” இந்தியத் தேசிய அரசின் மொழியாக வழங்கப்பட்டு, அனைத்து தேசிய இனங்கள் மீதும் திணிக்கப்படுகின்ற சூழ்நிலையில், இந்தித் தேசிய இனத்திற்கு அது ஆதாயமானதாகும். இந்தி மொழியுடன் சமரசம் கொள்ளாத மற்ற தேசிய இனங்களுக்கு அது பாதகமானதாகும். இச்சூழலில், ”இந்தித் தேசிய இனமும் ஒடுக்கப்படுகின்றது” என்பது எங்காவது பொருந்துமா?


”இந்தித் தேசிய இனமும் இந்தியத் தேசிய அரசால் ஒடுக்கப்படுகின்றது” என்ற இந்தக் கூற்றை, ”அமெரிக்க மக்கள் அந்நாட்டு முதலாளி அரசால் ஒடுக்கப்படுகின்றனர்” என்ற கூற்றுக்குத் தான் எடுத்துக்காட்டாக கூற முடியுமே தவிர, ஈழத்தமிழர்கள் சிங்கள அரசால் ஒடுக்கப்படுவதைப் போலவே, இந்தித் தேசிய இனத்தையும் இந்திய அரசு ஒடுக்குகின்றது என்று கூற முடியாது. கூறவும் கூடாது.


இந்தித் தேசிய இனத்திற்கு இந்திய அரசு என்பது, அதன் தேசிய முதலாளிய அரசாகும். அதனால் இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்தித் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களை பொருளியல் ரீதியில் சுரண்டுகின்றன. ஒடுக்குகின்றன.


ஆனால், இந்தித் தேசிய இனத்தோடு சமரசம் செய்து கொள்ளாத காசுமீர், மணிப்புர், தமிழ்நாடு உள்ளிட்ட அயல் தேசிய இனத்தவர்களுக்கு இந்திய அரசு என்பது ஆதிக்க இந்தித் தேசிய இனத்தின் இனவெறி அரசாகும். இத்தேசிய இனங்கள் மீது இந்திய அரசு செலுத்தும் ஒடுக்குமுறை என்பது தமது இந்தி ஆதிக்கக் கட்டமைப்பின் கீழ்படியாத தேசிய இனங்களை மீதான இனவெறியில் பிறப்பதாகும். இந்த இனவெறியின் வழியே, கீழ்படியாத தேசிய இனங்கள் மீது இந்திய ஆளும் வர்க்கங்கள், அவர்தம் தாயகங்களைப் பறித்து தமது பொருளியல் சுரண்டலை விரிவுபடுத்துகின்றனர்.


இதிலிருந்து நாம் சொல்வதன் சாரம் இது தான்.


ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்துடன், கலந்து உருவான ”இந்தி” மொழி பேசுகின்ற மக்களுக்கு பெருமிதத்தையும், இறையாண்மையையும் வழங்கக்கூடிய ஆரிய இனவெறி நாடே இந்தியாவாகும். இந்தி தேசிய இனத்திற்கு ”இந்தியா” தேசிய அரசாகவும், மற்ற தேசிய இனங்களுக்கு ”இந்தியா” இந்தி ஆதிக்க இனவெறி அரசாகவும் விளங்குகின்றது. இந்தி இதன் தேசிய மொழியாக உள்ளது என்பதால் இங்குள்ள அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் ஒடுக்கப்படுகின்றன. இந்தியுடன் சமரசம் செய்து கொண்டோர் மட்டுமே தேசிய முதலாளிகளாக வெளிப்படுகி்ன்றனர். குஜராத், பீகார் உள்ளிட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளும், மக்களும் அவர்தம் சொந்த மொழிகளை மறந்து இந்தித் தேசிய இனத்தோடு சங்கமித்து ஒற்றைத் தேசிய இனமாகவே வளர்ந்து வருகின்றனர். இவ்வாறு, வடநாட்டில் உள்ள பல்வேறு தேசிய இனத்தவர்களும் பெரும்பாலும் இந்தித் தேசிய இனத்துடன் இணக்கம் கொண்டே வாழ்கின்றனர். இவர்களுக்குள் தேசிய இனம் தொடர்பாக எவ்வித முரண்பாடுகளும் பெரிதாக இதுவரை எழுந்ததில்லை.


இவ்வாறு வடநாட்டு பெரும்பான்மையினராக வாழக்கூடிய இந்தி மொழி பேசும் மக்களினது கட்சிகளும், முதலாளிகளும் ”இந்தித் தேசிய இனம்” என்ற ஒரு ”மொசாக்” தேசிய இனமாக உருபெற்றிருக்கின்றனர். இது நேரடியான ஒரு பெருந்தேசிய இனம் இல்லையென்றாலும், இது இந்தியத் தேசியம் என்ற ஒடுக்குமுறை கருத்தியலை மேலும், வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மையமாகக் கொண்ட தேசிய இனங்களின் கூட்டாகும்.


இந்தித் தேசிய இனத்தின் மொழியாக விளங்கும் இந்தி மொழியே இந்தியத் தேசிய அரசின் ஆட்சி மொழியாக விளங்கி, அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குகின்றது. இந்தித் தேசிய இனத்துடன் சமரசம் செய்து கொண்ட மற்ற தேசிய இனங்களும் கூட இவ்வொடுக்குமுறை மைய முரண்பாடாக்கி, போராட்டங்களையோ, இயக்கங்களையோ கட்டியெழுப்பவில்லை.


மாறாக, ஆரிய மரபினத்திற்கு தொடர்பே இல்லாது விளங்குகின்ற காசுமீரி தேசிய இனத்தவர்கள், நாகர் மரபினத்தைச் சேர்ந்த நாகா தேசிய இனத்தவர்கள், மங்கோலிய மரபினத்தைச் சேர்ந்த அசாம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகள், பஞ்சாப் தேசிய இனத்தவர்கள், தமிழர் மரபினத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆகியோர் தான் ஆரிய இனவாத இந்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.


ஆனால், இந்திய அரசின் இதே அளவு ஒடுக்குமுறையை உள்வாங்கும் கேரளா, ஆந்திரம், ராஜஸ்தான், மகாராட்டிரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏன் இந்திய அரசுக்கு எதிரான சுயநிர்ணய உரிமைக் குரல்களும், போராட்டங்களும் எழவில்லை என்பதை ம.க.இ.க.வினர் ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்?


அங்கெல்லாம் அம்மக்கள் இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறையை உணர வேண்டிய தேவை ஏன் இதுவரை எழமாலிருக்கிறது? தமிழகத்தில் உள்ளது போலான, ”இந்திய அரசு நம் தேசிய இனத்திற்கு தொடர்பில்லாத அரசு” என்ற சிறு அளவிலான உணர்வு கூட அங்கே எழாமல், இன்னும் ”இந்தியத் தேசியக்” கட்சிகளின் பிடியில் இருக்கின்றனவே இது ஏன்?


ஓரளவு தேசிய இன உணர்வு எழுந்த காலகட்டத்தில், பெரியார் ”திராவிட நாடு” கேட்ட பொழுது கூட, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட தேசிய இனத்தவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. இவற்றையெல்லாம் கண்டு நொந்த பிறகு தான் ”தனித் தமிழ்நாடு” தான் நமது இலக்கு தனது இறுதி கூட்டத்தில் கூட பெரியார் கூறினார். இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


காசுமீர், மணிப்புரை போல் தமிழ்நாட்டில் தேசிய இனப் போராட்டத்தை முழு வீச்சில் தொடங்கி நடத்தப்பட்டு தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் உழைக்கிறோம். போராடுகிறோம். இதே நேரத்தில், அயல் தேசிய இனங்கள் நம் தமிழ்த் தேசத்துடன் ஐக்கியப் படுவதற்கான சிறிய அளவிலான முயற்சிகளையும் எடுப்பதில்லை. ஆனால், இந்திய அரசின் பகைமை உண்டாக்கும் போக்கை உணராமல் இந்தியத் தேசிய அரசிற்கு பக்கபலமாக நிற்கின்றனர். இந்நிலையில், நாம் கேரளாவுடனும், கர்நாடகவுடனும் தொடர்ந்து ஐக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமாம்.


இந்த அயல் தேசிய இனத்தவர், எல்லோரும் தம் இனம் ஒடுக்கப்படுகின்றது என்று உணர்ந்து மெல்ல போராடுவதற்காக நாம் தான் முன்முயற்சி எடுக்க வேண்டுமாம். அதுவரை நாம் நம் தேசிய இன விடுதலைக்குப் போராடாமல், இந்தியத் தேசிய அரசின் ஒடுக்குமுறையில் வெந்து சாகவேண்டுமாம். இது தானே உங்களைப் போன்றோரின் விருப்பம்.

இந்த விருப்பத்தைக் கொண்டிருப்பதால் தான் நாம் உங்களை ”சீர்குலைவு” சக்திகள் என வரையறுக்கிறோம்...

Labels: , ,

விவாதம்: ம.க.இ.க.வே ஏன் இந்த இரட்டை வேடம்? - பகுதி 3

அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம்…

கணினியில் அமர்வதற்கேற்ப நேரமும், சூழ்நிலையும் இல்லாமைக்கு வருந்துகிறேன். பதில் அளிக்காமல் எங்கும் ஓடி விட மாட்டேன். எனது மின்னஞ்சலைத் தொடர்பு கொண்டு என்னை நினைவு படுத்துங்கள்.
ஆனால், பதிலளிப்பதற்கு நேரமின்றி வேறு வேலைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்த கால தாமதங்கள். அனைவரும் பொறுத்தருளவும், மன்னிக்கவும் வேண்டுகிறேன்..
அன்புடன்,
அதிரடியான்.
ம.க.இ.க.வின் சர்வதேசியவாதிக்கு கீழ்கண்டவாறு எழுதியிருந்தோம்.
இது நாள் வரை கீழ்க்கண்டவாறு தான் ம.க.இ.க.வின் உண்மையான நிலைப்பாடு இருப்பதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

”இந்திய நாட்டின் பல்வேறு இனங்களும் (Races) ஒன்று கலந்து பல்வேறு இனக் கலாச்சாரங்களிடையே பரிவார்த்தனைகளும் கலப்புகளும் ஏற்பட்டு இன்று ஒன்றுகலந்த பின்னரும் இனவெறி (“ஆரிய“, “திராவிட”) வாதங்கள் தூண்டப்படுவது இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மக்களைத் திசைத் திருப்புவதற்காகத்தான்”

அதாவது, அவர்கள் தற்பொழுது குறிப்பிட்டு வருவதைப் போல ”தமிழர்”, ”கன்னடர்” என்பதெல்லாம் கூட இனவெறி இவர்கள் வரையறுப்பதில்லை. ”ஆரியர்”-”திராவிடர்” என்பது தான் இனவெறி என்று அவர்கள் வரையறுத்திருக்கின்றனர்.

ஆரியர்களை இடித்துரைத்தால் பார்ப்பனர்களுக்குத்தானே வலிக்க வேண்டும். ம.க.இ.க.விற்கு ஏன் வலிக்கிறது என்று தான் புரியவில்லை.

எனவே ”ஆரியம் – திராவிடம் எல்லாம் பேசாதீங்க” என்று முழக்கமிடும் ம.க.இ.க. தற்பொழுது கீழ்க்கண்டவாறும் எழுதி தனது இரட்டை வேடத்தை தற்பொழுது அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

//////////”இந்தியாவை பற்றியும், பார்ப்பனீயத்தை பற்றியும், தமிழ் ஆரிய போராட்டம் பற்றியும் நாம் நன்கு அறிவோம். இது இந்து,இந்தி,இந்தியா என்கிற பார்ப்பனிய உள்ளடக்கத்துடன் கட்டியெழுப்பபபட்டிருக்கும் ‘இந்து தேசியம்’என்பதையும் அறிவோம். எனவே தமிழுக்கும் ஆரியத்துக்குமான போராட்டத்தை நாம் எங்கேயும் எப்போதுமே மறுத்ததில்லை, அதை எதார்த்தமாக உள்ளது உள்ளபடி மிகை இல்லாமல் ஏற்கிறோம். ”//////////
-சர்வதேசியவாதிகள்
“ஆரிய திராவிடமெல்லாம் என்னைக்கோ முடிஞ்சி போச்சு.. இப்ப ஏன் அவா அதப் பேசணும்” என்கிற திருவல்லிக்கேணி பார்ப்பானைப் போலவே ம.க.இ.க.வினரும் எழுதியிருப்பதை எண்ணி நாம் நகைக்கவே முடிகிறது.

ஏன் இந்த இரட்டை வேடம் என்று தாம் நாம் உரத்துக் கேள்வி கேட்கிறோம்!
இதற்கு அவர்களிடத்தில் முறையான பதில் இல்லை. நான் அவர்களது நிலைப்பாடு என கூறியிருப்பதை கூட அது அவர்களது சரியான நிலைப்பாடு தான் என்று ஏற்கவுமில்லை. மறுக்கவுமில்லை. அதன் பின்னர் நான் எழுதியதைப் பதிகிறேன்..
சர்வதேசியவாதிகளுக்கு பதில்….

தமிழர்கள் மீது தில்லிக்காரர்கள் செலுத்தும் ஒடுக்குமுறை சிறப்புக் காரணங்களைக் கொண்டது என்று தங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை உங்களின் பதில் மூலம் அறிந்தேன். வரலாற்று ரீதியாக தமிழினம் ஆரிய இந்திய அரசால் ஒடுக்கப்படுதற்கு சிறப்புக் காரணங்கள் உண்டு என்பதற்கு, சில காரணங்களை நீங்களே பட்டியலிட்டும் காட்டியுள்ளீர்கள். நன்று.

அதே போல, தமிழுக்கும் ஆரியத்திற்கும் இடையிலான பகைமையை நாங்கள் மறுப்பதில்லை என்றும் நீங்கள் கூறியிருப்பதன் மூலம் ஆரியத்தின் இன்றைய வடிவமான இந்திய அரசுக்கும், தமிழினத்திற்கும் முரண்பாடும் பகைமையும் இருப்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். சரி.

ஆனால், இவற்றையெல்லாம், உணர்ந்த உங்களால், ”வரலாற்று ரீதியான சிறப்பு காரணங்கள் எதுவும் இன்றி ‘தமிழ் இனம் என்பதனாலேயே’ நம் மீது இந்திய அரசின் பாசிச ஒடுக்குமுறை ஏவி விடப்படுகிறது என்ற பார்வை புரியவில்லை” என்று எப்படி வாய்க்கூசாமல் சொல்ல முடிகின்றது?

ஆயிரமாயிரமாண்டுகளாக தமிழினத்திற்கு எதிரியாகவே நின்று கொண்டிருக்கும் ஆரியத்தையும், அதன் இன்றைய அரசு – அரசியல் வடிவமே, இந்திய அரசு – இந்தியத் தேசியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தால் தான் இதில் தெளிவுபெற முடியும். இதில், தெளிவுபெற்றது போல் நடித்துக் கொண்டிருந்தால் இவையெல்லாம் புரியாது.

எப்படி சிங்களனுக்கு, தமிழர்களை ஒடுக்க ”தமிழன்“ என்ற ஒற்றை அடையாளம் மட்டுமே போதிய காரணமாக இருக்கின்றதோ, அதே போலத்தான் ஆரிய ”இந்திய”னுக்கும் ”தமிழர்” என்ற அடையாளமே அவாகளை ஒடுக்கத் தூண்டுகிற சிறப்புக் காரணமாக விளங்குகின்றது. ஏனெனில், இந்திய அரசு என்பது ஆரிய இனவெறி அரசு என்பதே எங்களது வரையரை. இது உங்களுக்கு தெரிந்திருந்தும், அது தெரியாதது போல பேசி நடிக்கீறீர்கள் என்று தான் நான் குற்றம் சாட்டுகின்றேன்.

மார்க்சியத்தை அறிவியலாக பார்க்காமல், அதனை ஒரு சூத்திரம்(Formula) போலவே பார்த்து வருகின்ற மடமைத்தனம் தான் உங்களைப் போன்ற பலரிடமும் உள்ளது. இதிலிருந்து பிறக்கும் பார்வை கோளாறு தான் இதற்குக் காரணம். அதனால் தான் எங்களது பார்வை புரியவில்லை என உங்களால் வாதிட முடிகிறது.

மார்க்சியத்தை இன்றைய சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், ”அது இவ்வாறு கூறுகின்றது, எனவே அதன்படி இப்படி இருக்க வேண்டும், இப்படி செயல்பட வேண்டும்” என்று சூத்திரத்தை கையாள்வது போல மார்க்சியத்தை பார்ப்பது தான் உங்களைப் போன்றோரின் ”புரியாமை”க்கான காரணம் என்று நான் உறுதியாக வரையறுக்கிறேன்.

“திராவிடம்” இன்று தி.மு.கவிடம் மட்டும் தான் உள்ளது என்கிறீர்கள். சரி. நாம் திராவிடத்தை ஆதரிக்கவில்லை என்பதும் சரி. ஆனால், ”ஆரியம் – திராவிடம்” என்று கூறுவதைக் கூட ”இனவெறி” என்று கூறுவது தானே உங்களது வழக்கமான பார்வை.

”இந்திய நாட்டின் பல்வேறு இனங்களும் ஒன்று கலந்து பல்வேறு இனக் கலாச்சாரங்களிடையே பரிவார்த்தனைகளும் கலப்புகளும் ஏற்பட்டு இன்று ஒன்றுகலந்த பின்னரும் இனவெறி (“ஆரிய“, “திராவிட”) வாதங்கள் தூண்டப்படுவது இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மக்களைத் திசைத் திருப்புவதற்காகத்தான்” என்பது தானே உங்களது நிலைப்பாட்டின் சாரம். இதனை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.

கன்னடர், தெலுங்கர், தமிழர் என்று கூறுவதெல்லாம் கூட நேரடி இனவெறி என்று நீங்கள் வரையறுக்கவில்லை. மாறாக, எந்த ”“ஆரியம் – தமிழர்” ஆகியவற்றின் பகையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” என்று கூறுகிறீர்களோ, அதே “ஆரிய – திராவிடர்” வாதங்களைத் தான், ம.க.இ.க.வினர் இனவாதம் என்று இடது கையால் தள்ளுகின்றனர் என்பதே உங்களை சுட்டெரிக்கும் உண்மை. இதனை மறைத்திடவே, தற்பொழுது, “ஆரிய தமிழ்” பகையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என்றும் பசப்புகிறீர்கள்.

ஆரியம் இந்திய அரசை ஆள்கின்றது என்பதனை ஏற்கிறீர்களா? அல்லது அதெல்லாம் இன்றைக்கு கிடையாது என்கிறீர்களா?

“ஏற்கிறீர்கள்” என்றால், “ஆரிய இந்திய அரசு ஈழத்தமிழர்க்கு எதிராக நிற்கிறது” என்ற எங்களது கூற்றை எப்படி உங்களால் நகைக்க முடிகிறது?

“ஏற்கவில்லை” என்றால், ““ஆரியம்- தமிழர்” என்ற பகைமை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” என்று எப்படி உங்களால் சொல்ல முடிகின்றது?

நாங்கள் கேட்பதெல்லாம் ஏன் இந்த இரட்டை வேடம்? யாரைக் காப்பாற்ற இந்த இரட்டை வேடம்? என்பதைத் தான்….

Labels: , ,

Monday, October 5, 2009

விவாதம்: அதிரடியானின் பதில்கள் பகுதி 2

ம.க.இ.க.வினரின் விருப்பப்படி VRINTERNATIONALISTS (தளம்: http://vrinternationalists.wordpress.com/) என்ற தளத்தில் விவாதம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் நான் இடுகின்ற பதில்களை இங்கும் ஈடுகின்றேன். விவாதம் தொடங்கப்படுவதற்கு ஏதுவாக நான் எழுதிய முதல் பகுதிக்கு வந்த எதிர்வினைக்கு ஆற்றிய இரண்டாம் பதில் இது.
அதிரடியான்
7:04 பிற்பகல் இல் அக்டோபர்1, 2009 மணிக்கு எழுதியது
”பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, நாத்திக இயக்கம், தமிழகம் மட்டும் ‘இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்குள்’ வராமல் இருப்பது”

என இந்திய அரசால் தமிழகம் அதிகமாக ஒடுக்கப்படுவற்கு இது தான் காரணம் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளீர்கள். அந்த ”சிறப்புக் காரணங்களால்” தான் தமிழ்நாடு அதிகமாக ஒடுக்கப்படுவதாக நீங்களே ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள் பல.

தமிழ் இனத்தின் மீதான இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு இவ்வளவு சிறப்புக் காரணங்களும் அதன் பட்டியல்களும் தேவையில்லை. ”தமிழினம்” என்ற ஒற்றைக் காரணமே, இந்தியாவில் மட்டுமனி்றி, ஈழம் உள்ளிட்ட உலகில் எங்கெங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் மீது இந்திய அரசின் பாசிச தேசிய இன ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது என்பதே நமது கருத்து.

இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை அனைத்து தேசிய இனங்களின் மீதும் கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ள நிலையில், தமிழ் இனத்திற்கு இது அதிகமாக இருக்கிறது என்று தான் நாம் சொல்கிறோமே, தவிர, தமிழ் இனத்திற்கு எதிராக மட்டும் தான் இந்திய அரசு தேசிய இன ஒடுக்குமுறை செலுத்துகின்றது என்று நாம் ஒரு போதும் வாதிடவில்லை.

இந்தியா என்ற கட்டமைப்பு என்பதே ஆங்கிலேயார்களால் உருவாக்கப்பட்டது தான். எவ்வளவு தான் புரட்சிகரமானதாக இருந்தாலும், அது முதலாளிகளுக்கும் சுரண்டும் பார்ப்பனிய பனியாக்களுக்கும் சாதகமானதாகவே இருக்கும் என்பது எம் கணிப்பு. ஏனெனில், தற்பொழுதுள்ள இந்திய நிலப்பிரப்பில், உள்ள அனைத்து தேசிய இனங்களும் ஒற்றைப் புள்ளியில் இணைத்துப் புரட்சிக்கு இட்டுச் செல்லும் சூழல் நிலவவில்லை. இதற்குக் காரணம், இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இன ஒடுக்குமுறை என்பது அனைத்து தேசிய இனங்களுக்கும் சரி சமமானதாக இல்லை என்பதே எமது கருத்து.

இந்தியாவில், காசுமீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்கள் மீது இந்திய அரசுக் காட்டுகின்ற வன்மமும், கர்நாடகத்தின் தேசிய இனத்திற்குக் காட்டப்படுவதில்லை.

முல்லைப் பெரியாற்று அணை மீது புதிய அணைக் கட்ட, மகிழ்ச்சியுடன் இந்திய அரசு வழங்கியிருக்கும் அனுமதி என்பது, மலையாளித் தேசிய இனத்தவர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது.

குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் கூட, பாசிசப் பாசத்துடன் பொங்கி எழும் இந்திய ஆளும் வர்க்கங்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் நாயைப் போல சுட்டுக் கொல்லப்பட்டால் கூட கண்டுகொல்வதில்லை.

ஒருவேளை, குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லையைக் கடப்பதால் ஏற்படும் பிரச்சினையை பயன்படுத்தி, ”இந்திய – பாகிஸ்தான்” என்றுக் கூக்குரலிட்டு, இந்து மதவெறியைக் கட்டமைத்து ”இந்திய”த் தேசிய வெறியைக் கிளப்பி விடும் நோக்கம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இருப்பதால் இதனை பெரிதுபடுத்துகின்றது என்று சொல்லாம்.

அப்படியெனில், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினையை பயன்படுத்தி இந்தியத் தேசிய வெறியைக் கிளப்பிவிட இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு சிறு நொடி போதுமே. ஏன் அதனை இந்திய ஆளும் வர்க்கங்கள் செய்யவில்லை..?

ஏனெனில், இன்று மட்டுமல்ல வரலாற்றின் அனைத்து இடங்களிலும் தொன்று தொட்டே தமிழினத்திற்கு எதிரானதாகவே ஆரியம் செயல்பட்டு வந்திருக்கின்றது. இது மறுக்க முடியாத உண்மை. ஆரியத்தின் இன்றைய பாசிச சட்ட வடிவான ”இந்திய அரசு” என்ற ஒடுக்குமுறைக் கருவியும், அது பாதுகாக்கும் இந்திய ஆளும் வர்க்கங்களும் தொடர்ந்து இதைத் தான் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களின் மீதும் உலகமயம் ஏற்படுத்தியுள்ள பாய்ச்சல் வேகத்திலான ஒடுக்குமுறையை கைக் காட்டி, இது தான் இந்திய அரசின் சமமான ஒடுக்குமுறை என்று சொல்லாதீர். இந்த வரையறை தவறு.

தேசிய இனங்களிடையே பகைமை உண்டாக்கும் நோக்கும், இந்தியத் தேசிய அரசிற்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளும் நீங்கள், ஏன் அந்த பிழைப்புவாத நோக்கில் கூட இந்திய ஆளும் வர்க்கங்கள் தமிழினத்திற்கு ஆதரவாக நிற்க மறுக்கின்றன? இதனை எப்பொழுது பரிசீலனை செய்வீர்கள்..?

காவிரி சிக்கலில் கன்னட தேசிய இனத்தோடும், முல்லைப் பெரியாறு சிக்கலில் மலையாளி தேசி இனத்துடனும், பாலாறு சிக்கலில் தெலுங்கு தேசிய இனத்துடனும், உலகமயச் சுரண்டலில் ஏகாதிபத்தியங்களுடனும், இந்தியப் பாசிச அரசுக் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டை, தமிழ்த் தேசிய இனத்தை ஒடுக்குகின்றது என்பது தாம் நம் பிரதானக் குற்றச்சாட்டு. இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனவே நினைக்கிறேன்.

இந்நிலையில், இத் தமிழ்த் தேசிய இனத்தில் தேசிய இன விடுதலைக்காக நாம் அணி திரள வேண்டும் என்று சொன்னால் அது எந்த வகையில் தவறானது?

தமிழினத்தின் மீது செலுத்தும் அதே அளவு ஒடுக்குமுறை தான் கேரளாவிற்கும், மற்ற தேசிய இனங்களுக்கும் செலுத்தப்படுகின்றது என நீங்கள் வாதாடுகிறீர்கள். அதே வேளையில், ”சிறப்புக் காரணங்கள்” என பட்டியலிட்டு தமிழகத்திற்கு இவ்வொடுக்குமுறை அதிகமானதாக இருக்கிறது என்றும் சொல்கின்றீர். ஏன் இந்த இரட்டை வேடம்? யாரைப் பாதுகாப்பதற்காக இந்த வேடம் தரித்து நிற்கின்றீர்..?

தேசிய இனப் போராட்டத்தை இன்னும் துவங்காத, கேரளம், கன்னடம், மகாராட்டிரம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தியத் தேசியத்தின் பெயரால் நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அந்தந்த மாநிலங்களில் ஏதேனும், தேசிய இன உரிமைப் போராட்ட அமைப்புகள் எழுந்துள்ளனவா? ஏன் அவ்வாறு இதுவரை எழவில்லை?

தற்பொழுதுள்ள இந்தியாவில், காசுமீர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு, கன்னடம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் தான் தேசிய இன உரிமைக்கான போர்க் குரல்கள், ஓரளவாவது தெரியும்படி எழும்பியுள்ளன.

இந்திய அரசின் ஒடுக்குமுறை அனைவருக்கும் பொதுவானது என்றால், ஏன் கன்னடத்திலும், கேரளத்திலும், வேறு எந்த தேசிய இனத்திலும் தேசிய இன உரிமைக்கான போராட்டங்கள் எழவில்லை? அங்கெல்லாம் நாங்கள் கட்சி கட்டவில்லை அதானால் தான் எழவில்லை என்று சொல்லாதீர். பிறகு, அந்தந்த தேசிய இனங்கள் தான் அவர்களுக்கான தீர்வை முன் மொழிய வேண்டும் நீங்கள் சொல்வதை நீங்களே மீறுவதாகிவிடும் இக்கூற்று.

முதலில் இதனை மீளாய்வு செய்யுங்கள்.

Labels: ,

விவாதம்: தமிழ்த் தேசியம் – வரலாற்று அடிப்படை

ம.க.இ.க.வினரின் விருப்பப்படி VRINTERNATIONALISTS (தளம்: http://vrinternationalists.wordpress.com/) என்ற தளத்தில் விவாதம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் நான் இடுகின்ற பதில்களை இங்கும் ஈடுகின்றேன். விவாதம் தொடங்கப்படுவதற்கு ஏதுவாக நான் எழுதிய முதல் பகுதி இது.

தமிழ்த் தேசியம் - வரலாற்று அடிப்படை
உலகின் மூத்த இனமாக தமிழினம் விளங்குகின்றது. இது பல்வேறு ஆய்வுகளாலும நிறுப்பட்ட உண்மை. முன்பொரு காலத்தில் தற்பொழுது உள்ள இந்திய நிலப்பரப்புகள் முழுவதிலும் ”தமிழர்” என்ற மரபினம் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.

பின்னர் வந்த, வந்தேறிகளான ஆரியர்கள் தமிழர்களின் சிந்துசமவெளி நாகரீகங்களை அழித்து சமஸ்கிருத மேலாண்மையை புகுத்தி, தமிழர்களின் இடங்களை பாரம்பர்யப் பிரதேசங்களைப் கைப்பற்றிக் கொண்டனர். இதற்கான ஆதாரங்களாகவே ருக் வேதம் உள்ளிட்டவை விளங்குகின்றன.

தமிழினம் பல்வேறு குறுநில மன்னர்களாலும், பேரரசுகளாலும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்த நிலையில், ”தமிழ்” என்ற மொழி தமிழர்களை உளவியல் ரீதியாக ஒன்றிணைத்திருந்தது.

தொல்காப்பியத்திற்கு விளக்கமளித்து எழுதிய இளம்புரனார், ”உள்ளதை உள்ளபடிச் சொல்” என்ற விதிக்கு எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்டவாறு எழுதினார்.

”நும் நாடு யாதெனில் தமிழ் நாடு என்க!”

”உன்னுடைய நாடு தமிழ்நாடு” என்று ”உள்ளதை உள்ளபடிச் சொல்” என்ற விதிக்கேற்ப அன்றைக்கே உரைத்திருக்கின்றனர்.

”வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்”

இதுவும் தமிழ்நாடு என்ற நிலப்பரப்பிற்கான சங்க காலத்தில் வழங்கப்பட்ட ஒர் வரையரையே எனலாம்.

லெமூரியர் கண்டம் என்ற நிலப்பரப்பு முழுவதும் தமிழர்கள் வாழ்ந்திருந்தனர். இதற்கான சான்றுகளை முனைவர் க.ப.அறவாணன் தனது ஆய்வு நூல்களின் படி நிறுவியுள்ளார். தற்பொழுதிருக்கும், தமிழ்நாடும் இலங்கைத் தீவும் லெமூரியா கண்டத்தின் பிரியாத நிலப்பரப்புகளாக விளங்கிற்று. இவ்வாறு விளங்கிய நிலப்பரப்புகள் கடல் கோள்களால் பிரிக்கப்பட்டே இலங்கைத் தீவு, தனியாகவும் தமிழ்நாடு தனியாகவும் பிரிய நேர்ந்தது.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் பின்னர் வந்த வந்தேறிகளாலும், ஆக்கிரமிப்பாளர்களாலும் அடிமைப்படுத்தப்பட்டனர். இலங்கைத் தீவின் தமிழர்கள் சிங்களர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். இன்றைக்கு ”இந்தியா” என்ற ஒரு செயற்கை நாட்டில், ஒரு மாநிலமாகக் குறுக்கப்பட்டு, மொழிச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். அவர்களின் விடுதலைக்கான தத்துவமாகவே, வழிகாட்டு நெறியாகவே, ”தமிழ்த் தேசியம்” உள்ளது.

எம்மைப் பொறுத்தவரை, ”இந்தியா” என்பது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூட்டிய காலனிப் பெயர். பார்ப்பன பனியாக்களும் பெருமுதலாளிகளும் விரும்பி உருவாக்கிய ஒர் சந்தை. பார்ப்பனர்களும், பார்ப்பனிய பாதந்தாங்கிகளும் இந்தியத் துணைக் கண்ட நிலப்பரப்பில் அங்கம் வகித்த பல்வேறு தேசிய இனத்தவர்களை அடிமைப்படுத்தவும், சுரண்டிக் கொழுக்கவும் உருவாக்கியக் கட்டமைப்பே ”இந்தியா”. அந்த ”இந்தியா” என்ற நிலப்பரப்பில் வாழும் மக்கள் அனைவரும், தற்பொழுதுள்ள இந்திய ஆளும் வர்க்கம் (பார்ப்பனர்கள், பனியாக்கள், பெருமுதலாளிகள்) ஒரு போலித்தனமான ”இந்தியத் தேசியம்” என்ற இல்லாத தேசியத்தை கட்டமைத்தது.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இந்தியத் தேசியம் என்ற கருத்தியலை ஆரியப் பார்ப்பன இந்து மத வெறி சக்திகளையும், பெரு முதலாளிகளின் நலன் காக்கும் சந்தைகளையும் நன்கு வளர்த்து வருகின்றது. எனவே இந்தக் கட்டமைப்பு உடைத்தெறியப்பட வேண்டும் என்பது யம் நிலைப்பாடு.

உடைத்தெறிப்பட்டப் பிறகு, இந்நிலப்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கிவிடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். இது தவறு. இந்நிலப்பரப்பில், வாழ்கின்ற அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்கும் உரிமையை யார் வைத்திருப்பார்கள்? மார்க்சிய லெனினியப் புரட்சகர சக்திகள் ”இந்தியா” என்ற இந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி, தேசிய இனங்களின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் தற்பொழுதுள்ள ஒடுக்குமுறையை ஒழித்து விடலாம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது முடியாது என்று நாம் தெளிவாகக் கூறுகிறோம்.

முதலில் இந்திய நிலப்பரப்பு முழுமைக்கும், ”இந்தியன்” என்ற போலித்தனமான கருத்தியலை மிருகத்தனமாக இந்திய ஆளும் வர்க்கம் வளர்த்துவிட்டுள்ளது என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். இந்தக் கட்டமைப்பு தகர்க்கப்படாமலிருக்க, தேசிய இனங்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்து விட்ருப்பதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சியே ஆகும்.

இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை என்பது அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சமமான அளவில் இருந்ததில்லை. காவிரி நீர்ப் பிரச்சினையிலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சினையிலும் கன்னடத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது இந்திய அரசு. முல்லைப் பெரியாறு நீர் சிக்கலில் கேரளத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றது இந்திய அரசு. பாலாறு அணை சிக்கலில் ஆந்திரத்திற்கு ஆதரவாக வாய் மூடி நிற்கிறது இந்திய அரசு. தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லப்படும் பொழுது கூட, அதனை ஆதரித்து குதூகலிக்கிறது இந்திய அரசு.

ஈழத்தமிழர்கள் மீது இந்திய அரசு நடத்திய இன அழிப்புப் போரை நிறுத்து என்று தமிழகம் ஒன்று திரண்டு போராடிய பிறகும், அப்போரை தொடர்ந்து நடத்தி ஈழத்தமிழினத்தை இந்திய அரசு கொன்றழித்தது.

இந்திய அரசின், இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இன ஒடுக்குமுறைகளைக் கண்டு காசுமீரிலும், அசாமிலும், மிசோரத்திலும் அந்தந்த தேசிய இனத்தவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவ்வாறான தேசிய இனப் போராட்டங்கள் மற்ற தேசிய இனங்களில் நடைபெறவுமில்லை.

அதே சூழலில், ”தமிழர்கள்” மீது இந்திய அரசின் ஒடுக்குமுறை என்பது பல்வேறு நடவடிக்கைகளாலும் தொடரப்பட்டு வருவதும் மறுக்கப்படாத உண்மை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவெனில், ”இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பான இந்திய அரசு” என்பது ஆரியர்கள், பார்ப்பனர்கள், பனியா முதலாளிகள் உள்ளிட்டவர்களாலும், அந்த கும்பலுடன் சமரசம் செய்து கொண்ட தேசிய இனத்தவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட அரசே என்பதால் இந்திய அரசை ஆரிய இனவெறி அரசு என்று நாம் வரையறுக்கிறோம்.

இந்தித் தேசிய இனமே ஆரிய இனவெறி அரசை வழிநடத்துகின்றது என்கிறோம்.

இந்துமதவெறிப் பண்பாடே இந்தியத் தேசியப் பண்பாடு என்கிறோம்.

இதற்கு மாற்றாக, ஜே.வி.ஸ்டாலின் வரையறுப்பின்படி ஒரு தேசிய இனமாக வளர்ச்சிப் பெற்றுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமக்குள்ள சுயநிர்ணய உரிமைப்படி, தமக்கென ஒரு தேசத்தை, குடியரசை நிறுவிக்கிக் கொள்ள வேண்டும் என்கிறோம். இதனை ”தமிழ்த் தேசியப் புரட்சி” என்ற இன விடுதலைப் புரட்சியே நடத்தி முடிக்கும் என நம்புகிறோம்.

இந்தியத் தேசியக் கருத்திலை ஏற்றுக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், முதலாளிகள் உள்ளிட்டோர் இப்புரட்சிக்கான எதிரிகள்.

தமிழ்த் தேசிய ஆதரவு சனநாயக சக்திகள், இயக்கங்கள், கட்சிகள் முதலியன இப்புரட்சிகான நேச அணிகளாக அணிவகுப்பர்.

மனித விடுதலைக்கான தத்துவமான மார்க்சியம், சாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்ட பெரியாரியம், அம்பேத்கரியம், உள்ளிட்டவற்றோடு சங்க காலம் தொட்டு நம் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த அறநெறிக் கருத்துகள் ஆகியவையே இந்த லட்சியத்தை அடைந்திட உதவும்.

எனவே அத்தத்துவங்களை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்ப உபயோகித்து அவற்றைக் கொண்டு நமக்கான ஒரு சுயநிர்ணயமுள்ள ஒரு தனித் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவே ”தமிழ்த் தேசியம்” என்ற இக்கருதாக்கம் படைக்கப்பட்டுள்ளது.

(இதன் மீது விவாதம் செய்யுங்கள்)..

மீண்டும் தொடர்வேன்..

Labels: ,