பகிரங்க விவாததத்திற்கு நாம் தயார்! - அதிரடியான்
அன்பார்ந்த தோழர்களுக்கு… வணக்கம்.
ம.க.இ.க.வினர் ”தமிழ்த் தேசியம்” குறித்த விவாதம் செய்ய எமக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். அவ்விவாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். விவாதிப்போம்.
இவ்விவாதம், நேர்மையானதாக, ஒளிவு மறைவற்றதாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். தாங்கள் உறுதியளித்துள்ளபடி தயவு செய்து அனைத்துப் பின்னூட்டங்களையும் வெளியிடுங்கள்.
தமிழ்த் தேசியத் தோழர்களோ, ம.க.இ.க. தோழர்களோ அனைவரும் இச்சமூகத்தின் விடிவுக்காக ஏதேனும், செய்ய வேண்டுமென தாங்களுக்கு சரியெனப்பட்ட தத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ள இளைஞர்களே.. எனவே தனிநபர் தாக்குதல்கள், கொச்சைப் பேச்சுகள் வேண்டாம். விவாதம் தோழமையுடன் நடந்தால் நன்றாகவிருக்கும். கொச்சைப் பேச்சுகளுக்கு எதிராக் திரும்பவும் கொச்சைப் பேச்சகளே பதியப்படும் போது விவாதம் திசைத்திருப்பப்பட்டு விடும்.
கட்டுரைக்கு பதில் கட்டுரை என்று எழுதும் பொழுது, புதிய செய்திகளையும் மறுப்புகளையும் எழுத இயலும் என்று நினைத்தேன். வரிக்கு வரி விவாதம் எனும் பொழுது ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குள் மட்டுமே பேசிக் கொண்டிருப்போம். இருந்தாலும், உமது விருப்பப்படியே வரிக்கு வரி விவாதம் செய்வோம்.
தமிழ்த் தேசியத்தை மண் குதிரை என்றிருக்கிறீர். அந்த ”மண் குதிரை”யிலிருந்தே விவாதத்தை தொடங்கும் பொருட்டாக, அதைப் பற்றி எமது நிலைப்பாட்டை நான் தெளிவு படுத்துகிறேன். பிறகு, இந்நிலைப்பாடுகளை ம.க.இ.க.வினர் தர்க்கம் செய்யுங்கள். விமர்சியுங்கள். விளக்கமளிப்போம். விவாதிப்போம்.
எனது விளக்கங்களை நான் எனது தளததிலும் பதிகிறேன்.
தமிழ்த் தேசியத் தோழர்கள் VRinternatipnalists இணையதளத்தில் நடக்கவிருக்கும் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் விருப்பப்படுகிறேன்.
இது ஓர் அருமையான சந்தர்ப்பம்.
தாங்கள் இவ்விவாதத்தில், எழுதும் பதிவுகளை ஒருமுறை சேமித்து வைத்துக் கொண்டு VRInternationalists தளத்தில் பதிவிடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
அதிரடியான்.
எனது தளத்தில் எனது பின்னூ்ட்டங்களை நான் பதிவிடுகிறேன்.
Labels: ஈழம், ம.க.இ.க. விவாதம்
2 Comments:
தோழர் அதிரடியானுக்கு,
வாழ்த்துக்கள், உண்மையில் இது ஒரு அருமையான சந்தர்ப்பம், இதனை நிதானத்தோடு கையாளுங்கள்... தமிழ் தேசிய வெறுப்பு அரசியலை, புலியெதிர்ப்பு அரசியலை இளைஞர் மத்தியில் கொண்டு செல்வதற்கும், சர்வதேசியவாதம் என்ற சக்கரைக்கட்டிக்குள் இந்திய தேசிய நரகலை திணித்து அவ்விளைஞர்களின் வாயில் திணிப்பதற்கும் அரும்பாடுபட்டு செய்லாற்றி வரும் ம.க.இ.க கும்பலை தர்கத்தின் மூலமாக நிர்மூலபடுத்துவதற்கு தகுந்த வாய்ப்பு இது. இதனை பயன்படுத்திக் கொள்ளூங்கள். விவாதத்தை திசைதிருப்புவது, விவாதத்தை வளர்த்துசென்று வெறுக்கடிப்பது, நம்மை பலவீனமான விவாததிசை நோக்கி தள்ளுவது... இது போன்று பலவகையான் விவாத உத்திகளில் ம.க.இ.கவினர் கெட்டிக்காரர்கள்... கவனமாக கையாளுங்கள்..வாழ்த்துக்கள்!!!
தோழமையுடன்
ஈழமுத்துக்குமரன்
இந்த இணைப்பைக் கிளிக்குங்கள்.....இதில் நான் வைத்த விவாதங்களே காத்தாடுகின்றன.
http://vrinternationalists.wordpress.com/2009/08/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/
***
சரி அதை விடுங்கள். என் தளத்திலேயே ஒரு விவாதக் களத்தை திறந்து வைத்தேன். அங்கேயும் கூட யாரும் விவாதிக்கக் காணோம்.
http://www.mathibala.com/2009/08/blog-post_27.html
இப்போ என்ன விவாதம் செய்ய?
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home